வெள்ளிமணி

பெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்!

வைணவ சமயத்தின் ஆணிவேராக இருந்து தொண்டாற்றியவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரைத்...

கி.ஸ்ரீதரன்

வைணவ சமயத்தின் ஆணிவேராக இருந்து தொண்டாற்றியவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் சித்திரைத் திருவாதிரை நாளில் அவதரித்த இவருக்கு ஸ்ரீபாஷ்யகாரர், உடையவர், எம்பெருமானார், எதிராஜர், இளையாழ்வார், திருப்பாவை ஜீயர் என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு. இவரது மார்க்கம், "விசிஷ்டாத்வைம்' எனப்பட்டது.

இவர் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல முக்கிய வைணவத் தலங்கள் தென்னகத்தில் உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாட்டு முறைகளையும், விழா நடைமுறைகளையும் ஒழுங்கு படுத்திய பெருமை இவருக்கு உண்டு. எக்குலத்தைச் சார்ந்தவராயினும் அன்பும், தொண்டு உள்ளமும் கொண்டு பக்தியினால் இறைவனை அடையலாம் என்பதே நமக்கு அவர் காட்டிய வழி!

ஆதிசேஷனின் மறு அவதாரம் என புராணங்கள் கூறி அவரைப் பெருமை படுத்தும். ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஸ்ரீரங்கத்தில் "தானான திருமேனி', மேல் கோட்டைத் திருநாராயணபுரத்தில் "தமர் உகந்த திருமேனி', ஸ்ரீபெரும்புதூரில் "தாம் உகந்த திருமேனி'யாக விளங்குகிறார்.

இம்மாதம் 4 ஆம் தேதி ஸ்ரீராமானுஜர் ஜயந்தி, அவரது அவதாரத்தலத்திலும் மற்றும் முக்கியமான வைணவ ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT