அனைத்திலும் வெற்றி தரும் அம்மன்
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள நயினாகரத்தில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீகுலசேகர அம்மன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள நயினாகரத்தில் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீகுலசேகர அம்மன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
1470ஆம் ஆண்டில், குலசேகர மகாராஜாவால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. கருப்பாநதி ஆற்றின் கரையோரம் சிறிய கட்டடத்தில் எழுந்தருளிய குலசேகர அம்மனுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டும் பணியைக் குற்றாலம் மௌன மடத்தின் சித்வேஸ் சுவாமிகள் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
தற்போது ராஜகோபுரத்துடன் கூடிய பிரம்மாண்ட கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கே விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர், நவகிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்படுகின்றன. ராஜகோபுரத்தின் கீழ் வாசலிலும் ஒரே கல்லால் ஆன நிலைஅமைக்கப்பட உள்ளது. இக்கோயிலில் எழுந்தருளும் அம்மனை வழிபட்டால்அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
தகவலுக்கு: 94429 08775