சூரிய வழிபாடு
ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சூரியபகவானின் கிரணங்கள் சித்திரை மாதம் 6
• ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சூரியபகவானின் கிரணங்கள் சித்திரை மாதம் 6 ஆம் தேதியும், ஐப்பசி மாதம் 6 ஆம் தேதியும் பகவான் திருமேனி மீது சூரிய ஒளி படர்கிறது.
• கும்பகோணத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள திருவிசநல்லூர் சிவன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் ஒன்று, இரண்டு, மூன்று தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது விழுகிறது.
• தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநெல்லிக்கா ஆலயத்தில் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தி முதல் ஏழு நாளும் மாசி மாதம் பதினெட்டாம் நாள் முதல் ஏழு நாளும் அஸ்தமன நேரத்தில் சூரிய கிரணங்கள் லிங்கத் திருமேனி மீது விழுகின்றன.
Advertisement
• ஆதி சங்கரர் திருக்கயிலையில் கைலாயநாதர் அளித்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் முக்தி லிங்கத்தை பத்ரிகாசிரமத்திலும், வர லிங்கத்தை நேபாள நீலகண்ட ஷேத்திரத்திலும், மோட்ச லிங்கத்தை சிதம்பரத்திலும், போக லிங்கத்தை சிருங்கேரியிலும், யோக லிங்கத்தைக் காஞ்சிபுரத்திலும் பிரதிஷ்டை செய்தார்.
அமிர்தக் கலசம்
நாச்சியார் கோயிலிலுள்ள பெருமாளுக்கு வியாழக்கிழமைதோறும் பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் நைவேத்தியத்திற்கு "அமிர்த கலசம்' என்று பெயர்.