வெள்ளிமணி

தூய ஆவியின் வருகை!

இறைவாக்கினர் யோவேல் மூலம் ஆண்டவர் கூறியது - "இறுதி நாளில் நான் மாந்தர் யாவர் மேலும் என்

ரொசிட்டா

இறைவாக்கினர் யோவேல் மூலம் ஆண்டவர் கூறியது - "இறுதி நாளில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் முதியோர்கள் கனவுகளையும் காண்பர். அந்நாளில் உங்கள் பணியாளர்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.'

இறைமகனான இயேசுகிறிஸ்துவும் இவ்வுலகுக்கு மனிதனாக வந்து வாழ்ந்த காலத்தில், ஒரு பெருவிழாவின்போது, ஓரிடத்தில் எழுந்து நின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் நான் தரும் வாழ்வளிக்கும் நீரைப் பருகட்டும்' என்று உறுதிபடக் கூறினார்.

தம்மிடம் நம்பிக்கை கொள்வோர் பெறப்போகும் வாழ்வளிக்கும் தூய ஆவியைக் குறித்தே இயேசு இப்படிச் சொன்னார்.

ஒருசமயம், சமாரியப் பெண் ஒருத்தியிடம் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, "இவ்வுலகில் உள்ள தண்ணீரைக் குடிக்கும் மனிதருக்கு மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவருக்கோ என்றுமே தாகம் எடுக்காது. அதைக் குடிப்பவரின் மனத்தில் பொங்கியெழும் ஊற்றாக மாறி, நிலைவாழ்வு அளிக்கும்' என்றார்.

தாம் தரப்போகும் தூய ஆவியைப் பற்றியே அவர் இப்படிச் சொன்னார்.

ஒரு மனிதன் செய்யும் எந்தத் தவறுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் தூய ஆவியைப் பழிப்பவனுக்கோ மன்னிப்பே கிடைக்காது என்றும் இயேசு கூறியுள்ளார்.

மேலும், "இவ்வுலகில் நான் இருக்கும்போது என்னை இறைமகன் என்று நீங்கள் நம்பவில்லை. அதனால் தவறான தீர்ப்பினால் என்னைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்; நான் இறைவனிடம் சென்று என் துணையாளரான தூய ஆவியை உங்களிடம் அனுப்புவேன். அவர் உங்களிடையே வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றிய உங்களின் கருத்து தவறானது என்று அறிவிப்பார்' என்றார்.

இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்னர், அவருடைய சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி பூட்டிய அறைக்குள் தாய் மரியாவுடன் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது ஓர் அதிசயம் நடந்தது.

தீடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் அந்த அறைக்குள் உண்டானது. நெருப்பு போன்று சிறிய நாவுகள் அங்கிருந்த அனைவரின் மேலும் வந்த அமர்ந்ததை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்கள்.

இதன் பிறகுதான் சீடர்களுக்குத் துணிச்சலும் வீரமும் வந்தது. எல்லா மொழிகளிலும் பேசக்கூடிய வல்லமையும் அவர்களுக்குக் கிடைத்தது.

அதன் பின்னர் உலகெங்கும் சென்று கிறிஸ்துவைப் பற்றிய வாழ்வு தரும் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தனர்.

நமக்கும் இந்த நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமை உண்டு. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்து நமக்கு அருளிய கட்டளைகளின்படியும் கொடைகளின்படியும் வாழ வேண்டும் என்று உறுதி கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT