முகப்பு
வெள்ளிமணி

அழகனின் அருட்கோலங்கள்!

சென்னை திருவொற்றியூர், தியாகேஸ்வரர் கோயிலில் தோகை விரித்த மயிலில் அமர்ந்துள்ள முருகனை காணலாம்.

Updated On : 29 மே, 2014 at 3:24 PM
பகிர்:

* சென்னை திருவொற்றியூர், தியாகேஸ்வரர் கோயிலில் தோகை விரித்த மயிலில் அமர்ந்துள்ள முருகனை காணலாம். முருகன் இங்கு வேலுக்கு பதிலாக வில் ஏந்திய நிலையில் காணப்படுகிறார்.

* பல்லடம் அருகிலுள்ள மலைப்பாளையம் அருகில் பஞ்சமுருகன் கோயில் உள்ளது. நடுவில் ஒரு வேலும் அதைச் சுற்றி நான்கு வேல்களும் நடப்பட்டிருக்கும். இந்த ஐந்து வேல்களுக்கும் அபிஷேகம், அர்ச்சனை நடைபெறுகிறது.

* கையில் கிளி வைத்துள்ள முருகனை களகிரி எனும் தலத்தில் தரிசிக்கலாம்.

Advertisement

* பெரம்பலூர் செட்டிக் குளத்தில் முருகன் கையில் கரும்பு தண்டத்துடன் அருள் பாலிக்கிறார்.

* திருநள்ளாறு தலத்தில் கையில் மாம்பழம் ஏந்திய நிலையில் காட்சி கொடுக்கும் கந்தனை தரிசிக்கலாம்.

* கொல்லிமலை முருகப்பெருமான் வேடுவக் கோலத்தில் தலையில் வேடன் கொண்டையும், வலக்கையில் தண்டும், இடக்கையில் சோழியும் விளங்கக் காட்சி தருகிறார்.

* பதினோரு திருமுகங்களும், இருபத்துநான்கு கரங்களையும் கொண்டு விஸ்வரூபக் காட்சி தரும் முருகன், பழனி மலையில் வடக்குப் புறமுள்ள மண்டபத்தில் அருள் பாலிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.