ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி ஆலயம்!
திருச்சி, நொச்சியம், மாதவப்பெருமாள் கோயில் அருகில் கொள்ளிடம் ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது சாந்தி ஆஸ்ரமம்!
திருச்சி, நொச்சியம், மாதவப்பெருமாள் கோயில் அருகில் கொள்ளிடம் ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது சாந்தி ஆஸ்ரமம்! காஞ்சி மகா சுவாமிகளின் அனுகிரகத்தாலும், அவரது பக்தை ஸ்ரீமதி ராஜலட்சுமி விட்டலின் பெருமுயற்சியாலும், "ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மாமுனிவர் சேரிடபிள் டிரஸ்ட்' என்ற அமைப்பின் மூலம், தற்போது வேத பாடசாலை. கோசாலை இயங்கி வருகிறது.
ஆஸ்ரம வளாகத்தில் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த யந்திரங்களுடன் கூடிய ஸ்ரீ சக்ரம் அம்பாள் பீடத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில், ஸ்ரீ வேதவியாசர், ஆதிசங்கரர், காஞ்சி மகாசுவாமிகள் ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
மகா கும்பாபிஷேகம் ஜுன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜுன் 12 ஆம் தேதி ஸ்ரீ மகாசுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவமும், ஜுன் 30 ஆம் தேதி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிக்கு சாம்ராஜ்ய பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் இவ்வைபவங்களில் பங்கேற்று பயன் பெறலாம்.
தொடர்புக்கு: 96009 33390.