ஸ்ரீ வைகுந்தநாதர் திருக்கோயில்
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ வைகுந்த விண்ணகரம் என்று போற்றப்படும் திருநாங்கூர் ஸ்ரீ வைகுந்தநாதர் திருத்தலமும் ஒன்று
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ வைகுந்த விண்ணகரம் என்று போற்றப்படும் திருநாங்கூர் ஸ்ரீ வைகுந்தநாதர் திருத்தலமும் ஒன்று. திருநாங்கூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் எம்பெருமான் வைகுந்தநாதனாக உபய நாச்சியாருடன் ஆதிசேஷன் மீது வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
உற்சவ மூர்த்தங்களும் இதே போன்று அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் பரமபதத்திற்கு சமமானதாகும். தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் திருநாங்கூர் 11 கருட சேவையில் இத்தலத்து பெருமாளும் எழுந்தருளி காட்சி கொடுக்கிறார்.
இத்தலத்தில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி அவர்கள் முயற்சியால் பல்வேறு திருப்பணிகள் நடந்து முடிந்தததைத் தொடர்ந்து மகாசம்ப்ரோக்ஷண வைபவம் நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
திருக்கோயிலுக்கு, மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு.
தொடர்புக்கு: 04364 275697.