உத்தமர் கோயில்
ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு அருகில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர் கோயில். இத்தலம், "மும்மூர்த்திகள்....
ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு அருகில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர் கோயில். இத்தலம், "மும்மூர்த்திகள் திருத்தலம்' என்றும் ஏழு குருநாதர்கள் அருள்புரிவதால் "சப்தகுரு' தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் சிவபெருமான் பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால் பிச்சாண்டவர் கோயில் என்றும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகப் பணியாற்ற திருமாலின் நாபிக் கமலத்தில் பிரம்மா தோன்றியதால், "பிரம்மபுரி' என்றும் போற்றப்படுகிறது. அதோடு ஓர் ஊழிக்கால பிரளயத்தின்போது உலகம் முழுவதும் ருத்திரரிடம் ஒடுங்கியபோது, வேதங்களே கதம்ப மரங்களாகத் தோன்றின. திருமால் அனைவரையும் காக்கும் பொருட்டு உத்தமராகத் திகழ்வதால் "உத்தமர் கோயில்' என்றும் பெயர் பெற்றது எனத் தலப்புராணம் தெரிவிக்கிறது.