வெள்ளிமணி

இந்துமத அற்புதங்கள் - வழிவிட்டு நின்ற வெள்ளம்

காவிரியாற்றின் தென்கரையில் உள்ள சிற்றூர் கண்டியூர். ஆற்றின் மறு கரையில் உள்ளது திருவையாறு.

டாக்டா் சுதா சேஷய்யன்

காவிரியாற்றின் தென்கரையில் உள்ள சிற்றூர் கண்டியூர். ஆற்றின் மறு கரையில் உள்ளது திருவையாறு.

சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று விட்டுக் கண்டியூரை அடைந்தார்கள். கண்டியூர் ஈசனை வணங்கிவிட்டுப் பார்த்தால், காவிரியில் பெரு வெள்ளம்.

நிமிர்ந்து நோக்கினால், எதிர்க்கரையில் பஞ்சநதீஸ்வரப் பெருமானின் திருக்கோயில் விமானம் தெரிந்தது.

திருவையாறு செல்ல மனம் கொள்ளா ஆசை; ஆனால், வழி?

ஆற்றை எப்படிக் கடப்பது? சாதாரண ஆறு அன்று. வெள்ளம் பொங்கிப் பிரவகிக்கும் ஆர்ப்பாட்ட ஆறு.

சேரமான் பெருமாளோ தன்னாசையை விடத் தயாராய் இல்லை. சுந்தரரைப் பார்த்தார்.

தோணியில்லை; படகில்லை; பக்தியும் பாடலும் மட்டுமே இருந்தன.

சுந்தரர் சுவாமியை அழைத்துப் பாடினார். ஓலமிட்டுப் பாடினார். சிறிது நேரம் கழித்து எதிர் ஓலம் கேட்டது.

பார்த்தால், பிள்ளையார். விநாயகர் எதிர் ஓலமிட்டுக் கொண்டு எதிர்க்கரையில் நின்றார்.

அப்போது நடந்தது அந்த அதிசயம். காவிரியின் ஓட்டம் தடைப்பட்டது. மேற்கில் நீர் சுவர் போல் நின்றது. கிழக்கில் நீர் வேகமாக ஓடியது. இடையில் தண்ணீரில்லாமல் வெறும் மணல் பரப்பு.

சுந்தரரும் சேரமானும் மெல்ல நடந்து திருவையாறு அடைந்தார்கள். கண்ணனுக்காக யமுனை வழி

விட்டாள். அடியாருக்காகக் காவிரி வழி கொடுத்தாள்.

வெள்ளத்தில் வழிகேட்டு சுந்தரர் ஓலமிட்ட பதிகம்

"பரவும் பரிசுஒன்று அறியேன்நான்

பண்டே உம்மைப் பயிலாதேன்

இரவும் பகலும் நினைந்தாலும்

எய்த நினைய மாட்டேன்நான்

கரவில் அருவி கமுகுண்ணத்

தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை

அரவந் திரைக்கா விரிக்கோட்டத்து

ஐயாறு உடைய அடிகளோ.''

திருவையாறு தலத்தினைச் சென்றடையும் வழி:

தஞ்சாவூருக்கு 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சை, கும்பகோணம் முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. சிறப்புகள் பல வாய்ந்த தலம்.

இறைவன் - பஞ்சநதேஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்

இறைவி - தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT