முகப்பு
வெள்ளிமணி

நவக்கிரகங்கள் அருளும் நன்மைகள்

சூரியன்- ஆரோக்கியம், சந்திரன்- கீர்த்தி, அங்காரகன்- செல்வம், புதன்- அறிவு, குரு- நன்மதிப்பு, சுக்கிரன்- அழகு, நாவன்மை, சனி- சந்தோஷம், ராகு- பகைவர் பயம் போக்குதல், கேது- குல அபிவிருத்தி.

Updated On : 7 ஏப்ரல் 2016, 3:35 pm IST
பகிர்:

சூரியன்- ஆரோக்கியம், சந்திரன்- கீர்த்தி, அங்காரகன்- செல்வம், புதன்- அறிவு, குரு- நன்மதிப்பு, சுக்கிரன்- அழகு, நாவன்மை, சனி- சந்தோஷம், ராகு- பகைவர் பயம் போக்குதல், கேது- குல அபிவிருத்தி.

பிரசவம் பார்த்த அம்பாள் நாகப்பட்டினம் - திருவாரூர் வழியில் உள்ள திருப்புகலூரில் கருந்தார்குழலி எனும் சூலிகாம்பாள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக தலவரலாறு கூறுகிறது. மாலை வேளைகளில் இந்த அம்பாளுக்கு வெள்ளைப்புடவை அணிவித்து ராஜராஜேஸ்வரியாய் இங்கு வழிபடுவது வழக்கம். திருமண வரம் வேண்டும் கன்னிப்பெண்கள் இந்த அம்பிகைக்கு வெள்ளைப் புடவை சாத்தி வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு திருமண வரம் கிட்டுகிறது.

இறை வடிவங்கள் ஐந்து

Advertisement

< சுயம்பு - தாமாகவே தோன்றிய திருவுருவங்கள்;

< தைவீகம் - பிரம்மாதி தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டவை;

< அர்ஷம்- சித்தர்களாலும் ரிஷிகளாலும் ஏற்படுத்தப்பட்டவை;

< மானுஷம்- அடியார்களாலும் மன்னர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை;

< ஆசுரம்- அசுரர்களால் அமைக்கப்பட்டவை.

- கே. பிரபாவதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.