வெள்ளிமணி

பொன்மொழிகள்! 

உன் ஆணவம், செருக்கு அனைத்தையும் தூர எறிந்துவிடு. அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட.

சுவாமி கமலாத்மானந்தர்

உன் ஆணவம், செருக்கு அனைத்தையும் தூர எறிந்துவிடு. அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட. இதுதான் நான் உனக்குச் சொல்லும் கடைசி வழி. இதைத் தவிர உன் நன்மைக்கு உரிய வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. 


எல்லாவற்றையும் ஆக்குபவனும், எல்லோரையும் தாங்குபவனும், எல்லாவற்றையும் ஆள்பவனும், எல்லாவற்றையும் அழிப்பவனும், ஞானம் முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவனும், அடியும், நடுவும், முடிவும் இல்லாதவனுமாகிய உங்கள் தெய்விக வடிவத்தை நீங்கள் உபதேசித்தபடியே என் கண் எதிரில் பார்க்கிறேன்.

- ஸ்ரீ ராமானுஜர்


பயப்படுத்துபவனும், பயத்தைப் போக்குபவனும் அவனே. - விஷ்ணு சகஸ்ரநாமம் இருதயக் குகையில் உள்ள அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே ஹரி, அவனே இந்திரன், அவனே அக்ஷர புருஷன், அவனே பரமேசுவரன்.

- நாராயண சூக்தம்

உலகில் நாம் அனுபவிக்கும் சுகமெல்லாம் பரமானந்தத்தின் ஒரு திவலை. அதன் ஒளியால் உலகம் விளங்குகிறது. அந்தப் பொருளைக் கண்டவருக்கு மற்றதெல்லாம் அதனுள்ளே தோன்றும்.


காரணமாகிய மண்ணைப் பற்றி அறிந்தால் காரியமாகிற மண்குடம், மண்பானை முதலியவை அறியப்படுவதுபோல, பிரம்மத்தை அறிந்தால் உலகம் அறியப்பட்டதாகிறது. 

- ஆதிசங்கரர்

எள்ளில் எண்ணெய் போன்றும், சக்கிமுக்கிக் கல்லில் நெருப்புப் போன்றும் அனைவரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார். நீங்கள் அறியாமையிலிருந்து விழித்தால் வாழ்வு பெறுவீர்கள்.

எல்லாவற்றிலும் ஒன்றையே (பரம்பொருளையே) பார்க்க வேண்டும். அதைத் தவிர இரண்டாவது உங்களை வழிதவறச் செய்யும்.

- கபீர்தாசர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT