வெள்ளிமணி

குருபகவான் பார்வையில் உண்டாகும் யோகங்கள்!

தினமணி

குருபகவான் சந்திரபகவானைப் பார்த்தால் ஏற்படுவது - குரு சந்திரயோகம்
*மனநிலை சீரடையும்.* கற்பனை வளம் ஓங்கும். *கலைத்துறையில் பாண்டித்யம் உண்டாகும். * உடல் ஆரோக்கியம் சிறப்பாகும். தாய் நலம் சீராகும். 
குருபகவான் செவ்வாய்பகவானைப் பார்த்தால் உண்டாவது - குருமங்கள யோகம்
*அரசாங்கத்தில் உன்னத பதவி. * ராணுவத்தில் முன்னணி பதவி *பொறியியல் துறையில் தேர்ச்சி. *நிலபுலன்கள், சொத்துகள் சேர்தல். 
குருபகவான் புதபகவானைப் பார்த்தால் 
*மகாபுத்திசாலித் தனம் ஏற்படும். *கல்விமான், நுட்பமான விஷயம், கணிதம், நிபுணத்துவம். *வியாபாரம், இனிமையான பேச்சு, வழக்கறிஞர், நீதிபதி, சொற்பொழிவாளர், மாமன் மூலம் நலம்.
குருபகவான் சுக்கிரபகவானைப் பார்த்தால் 
*கலைஞானம், நடிப்புத்துறை. *அரசியல் அந்தஸ்து. *நல்வாழ்க்கை துணை அல்லது துணைவர்.
குருபகவான் சனிபகவானைப் பார்த்தால்
*சனிபகவானால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையக்கூடும். *நிலம், மண் இவற்றால் லாபம். *நிலக்கரி, எண்ணெய், ஈயம். *பஞ்சாயத்து, பொதுநலப்பணி, தார்மீகப் பணி. 
குருபகவான் ராகுபகவானைப் பார்த்தால்
*புகழ் உண்டாகும், நடிப்புத்துறையில் வெற்றி. *வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு. *ஸ்பெகுலேஷன், நவீன விஞ்ஞானத்தில் சாதனை.
- கே.சி.எஸ். ஐயர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT