முகப்பு
வெள்ளிமணி

சுகம் தரும் சுவாதி!

திருமாலின் நரசிம்ம அவதார நட்சத்திரம் சுவாதி. வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் சுவாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

திருமாலின் நரசிம்ம அவதார நட்சத்திரம் சுவாதி. வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் சுவாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது. கடலில் சிற்பிக்குள் முத்து தோன்றுவதும் இந்த நட்சத்திரத்தில் தான் என்று கூறுவர். பெரிய பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். "வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்' என்று அனுமன் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. சப்தரிஷி மண்டலத்தின் தென்கிழக்கில் ஓர் அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது. அதில் அதிபிரகாசமாகத் தெரியும் சுவாதி இருளை தன் ஒளிக்கரணங்களால் அகற்றிவிடும் தன்மை படைத்தது. அராபியர்கள் இதை "சுவர்க்கத்தின் காவலன்' என வர்ணிக்கின்றனர். இவ்வாறெல்லாம் புகழுக்கும் பெருமைக்கும் உரித்தான சுவாதி நட்சத்திரம் கூடிய தினத்தில் செய்யப்படுவது ஸ்வாதி ஹோமம். ஸ்ரீ நரசிம்மசுவாமியை தியானித்து செய்யப்படுவது. மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த ஹோமத்தின் பலனாக எல்லாவிதமான சுகங்களும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. சிறப்புகள் வாய்ந்த இந்த ஹோமம் நடைபெறும் ஆந்திர மாநிலம், அகோபில úக்ஷத்திரத்தின் மேன்மையைப் பற்றி புராணங்கள் கூறுவது:

காசியில் ஆயிரம் யுகங்கள் வசித்தும், ப்ராயாகையில் இருபது யுகங்கள் வசித்தும், கயா ஷேத்திரத்தில் நூறு யுகங்கள் வசித்தும் பெறக்கூடிய பலனை அகோபிலத்தில் ஒரே நாள் வசிப்பதின் மூலம் பெறலாம். இங்கல்லவோ தூணைப் பிளந்து நரசிங்கம் புறப்பட்டது. 

அனேக மகான்கள் பட்டத்தை அலங்கரித்த அகோபிலமடம் வைஷ்ணவ மதத்தை வளர்த்து உலகிற்கு பேருதவி செய்து வருகிறது. இம்மடத்து ஜீயர்கள் "அழகிய சிங்கர்' என்று அழைக்கப்படுகின்றார்கள். உலக நன்மையை முன்னிட்டு தற்போதைய ஸ்ரீமத் அழகிய சிங்கரின் அனுக்கிரகத்துடன் இத்தலத்தில் ஸ்வாதி நட்சத்திர ஹோமம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வரிசையில், 250- ஆவது ஸ்வாதி நட்சத்திர ஹோமம் பிப்ரவரி 6, 7 தேதியில் நடைபெறுகின்றது. அதனையொட்டி முதல் நாள் அகோபிலம் அருகில் உள்ள கிராமங்களில் உற்சவமூர்த்தி பிரகலாத வரதன் பார்வேட்டை சஞ்சாரமாக எழுந்தருளி அங்கு வாழும் மக்களுக்கு நரசிம்ம பிரசாதம் வழங்கப்படுகின்றது. மறுநாள் அகோபிலத்தில் உள்ள நவநரசிம்ம சந்நிதிகளில் சிறப்பு பூஜை, திருவாராதனம் மற்றும் தளிகை சமர்ப்பித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 

தொடர்புக்கு: 98410 23450 / 94441 31663.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.