* மனம் அமைதியாக இருப்பதற்குக்குச் சமமான உறவு இல்லை, சத்தியத்தைவிட உயர்ந்த தவம் இல்லை. முக்தியைவிட மிகப் பெரிய இலாபம் இல்லை. கங்கைக்குச் சமமான வேறு ஒரு நதியே கிடையாது.
- சனக மகாமுனிவர்
* எவன் சுயநலத்தைத் தியாகம் செய்கிறானோ, எவனுக்குப் பொறாமையும் கர்வமும் இல்லையோ, எவன் அன்பாகவும் பணிவாகவும் இனிமையாகவும் பேசுகிறானோ, எவனுக்கு இந்த உலக சுகபோகங்களில் ஆசை இல்லையோ, அவனே ஸ்ரீ ராமபிரானின் உண்மையான ஊழியன்.
- சமர்த்த ராமதாஸ்
* கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை, பெற்ற தாய்க்குச் சமமான குரு இல்லை. பகவான் விஷ்ணுவிற்குச் சமமான கடவுள் இல்லை. அதேபோல் குருவைவிடச் சிறந்த தத்துவம் கிடையாது.
- சனக மகாமுனிவர்
* கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்தாலும்கூட, அவன் கிருதயுகத்தில் பெரும் தவம் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்.
- பராசர முனிவர்
* உபகாரம் செய்யாதவர்களுக்கும் உதவியே செய்வது, பிரியமாக இருப்பது, செய்நன்றி மறக்காமல் இருப்பது, விழுந்தவர்களைத் தூக்கி விடுவது ஆகியவையே நற்குலத்தில் பிறந்தவர்களுக்கு அடையாளங்கள்.
- பஞ்சதந்திரம்
* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.
- புத்தர்
* திரேதாயுகத்தில் யாகங்களைச் செய்வதால் அடையும் பயனையும், துவாபரயுகத்தில் எம்பெருமானை அர்ச்சிப்பதால் கிடைக்கும் பயனையும், கலியுகத்தில் கேசவனுடைய திருநாம சங்கீர்த்தனம் ஒன்றைச் செய்தே பெறலாம்.
- வேதவியாசர்
* தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக சந்தோஷப்படுவதில்லை. அவமதித்தாலும் தாபம் அடைவதில்லை. கங்கையின் மடுவைப்போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ, அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
- விதுர நீதி
* ஹே சூரிய பகவானே! நாங்கள் செய்யும் பாவங்களை மன்னித்து எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்வாய். நாங்கள் உன்னை எப்போதும் வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்.
- ரிக் வேதம்
* ஹே சூரிய பகவானே! ஒளிக்கெல்லாம் ஒளி தருபவனே, உலகங்களில் வியாபித்திருப்பவனே! எனக்கு சிறப்பையும் பொருளையும் அருள்வாய். என் பாவங்களைப் போக்கி எனக்கு மங்களங்களை அருள்வாய்.
- மகாகவி பவபூதி எழுதிய "மாலதீ மாதவம்'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.