வெள்ளிமணி

தலைநகரில் அதிருத்ர, சகஸ்ரசண்டி ஹோமம்!

எஸ். ஸ்ரீநிவாஸன்

புதுதில்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகமந்திர் கடந்த 60 வருடங்களாக வழிபாட்டில் உள்ளது. ஆகம சாஸ்திர விதிகளின்படி தகுந்த நபர்களைக் கொண்டு நித்ய பூஜை, வழிபாடுகள், பிரதோஷ வழிபாடுகள், ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு உண்டான பூஜை, ஆஞ்சநேயர் வழிபாடு எனஅனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றது.  டில்லிவாழ் தமிழர்கள் மட்டுமின்றி வட இந்தியர்களும் தினசரி வந்து தரிசனம் செய்கின்றனர். 

ஸ்ரீ விநாயக மந்திர் கமிட்டி என்ற அமைப்பின் கீழ் திறம்பட நிர்வாகிக்கப்பட்டுவரும் இந்த ஆலயத்தில் தொடர்ந்து 6 -ஆவது தடவையாக அதிருத்ர பாராயண நிகழ்ச்சி அக்டோபர் 21 முதல் 26 வரையும்; சகஸ்ர சண்டிஹோம நிகழ்ச்சி அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரையும் நடைபெறுகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பாராயண, ஹோம வைபவங்களில் பங்கேற்கினறனர்.

உலக நன்மையை கருதியும் அமைதி வேண்டியும் பாரத நாடு மேன்மேலும் சுபீட்சம் அடையவும் இந்த சிறப்பு பாராயண, ஹோமங்கள் பெரிய அளவில் நடத்தப்பட உள்ளதாகவும், தலைநகரில் நடைபெற உள்ள இந்த பைவங்களுக்கு தாராளமான உதவி அளிக்குமாறும் கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

தொடர்புக்கு:  ஸ்ரீ.ஆ.கல்யாணராமன்- 98113 46932 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT