வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

* 1. அகங்காரம், 2. எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், 3. அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், 4. கோபம், 5. தான் மட்டும் வாழ்ந்தால்போதும் என்று கருதுதல், 6. நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீயகுணங்களும் கூர்மையான கத்திபோல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால் இவையே மனிதர்களைக் கொல்லுகின்றன அல்லாமல் யமன் கொல்லுகிறான் என்பதில்லை. - விதுரநீதி
* வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள். இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள். நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள். எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள். எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள். உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். அனைத்தையும் பகவானிடம் ஒப்படையுங்கள். "நம்மால் ஆவது ஒன்றுமில்லை' என்ற எண்ணம் மிகவும் முக்கியம்.
- மயான யோகி
* சத்தியமே ஜயிக்கும், பொய்யல்ல. ஆசைகள் பூர்த்தி பெற்ற ரிஷிகள் சத்தியத்தின் எல்லை நிலமாகிய மோட்சத்திற்கு எந்த மார்க்கத்தில் செல்லுகிறார்களோ, அந்தத் தேவயாண மார்க்கம் சத்தியத்தாலேயே பரப்பப்பட்டுள்ளது. 
- முண்டக உபநிஷதம்
* உடலுக்குள்ளேயே ஜோதிர்மயமாகப் பரிசுத்தமாய் விளங்கும் எந்த ஆத்மப் பொருளைச் சித்தமலம் நீங்கிய சந்நியாசிகள் காண்கிறார்களோ, அந்த ஆத்மப் பொருள் அகண்டமான பிரம்மசரியத்தாலும் தெளிந்த ஞானத்தாலும், இடைவிடாத தவத்தாலும் சத்தியத்தாலும் அடையப் பெறும்.
- முண்டக உபநிஷதம்
* உண்மை பேசு; தர்மவழியில் நட.
- தைத்ரிய உபநிஷதம்
* எவர்களிடம் சூதும் பொய்யும் வஞ்சனையும் இல்லையோ, அவர்களுக்கே இந்தக் குற்றமற்ற பிரம்மலோகம் உரியது.
- ப்ரச்ன உபநிஷதம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT