முகப்பு
வெள்ளிமணி

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.

Updated On : 7 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
06tlrtemple_0607chn_182_1
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM


பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் தரிசிக்கலாம். ஒரே இடத்தில் மும்மூர்த்திகளையும் வழிபட்டால் வரவேண்டிய சொத்துகள் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியில் உள்ள புத்துமாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. இக்கோயிலுக்கு வந்து மாவிளக்கு வைத்து வழிபட்டால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காரமடை. இங்குள்ள ரங்கநாதர் கோயிலில் மூலவர் ரங்கநாதர் சிவலிங்க வடிவில் இருப்பது சிறப்பு அம்சமாகும். உற்சவர் பெயர் வெங்கடேசப் பெருமாள். மூலவருக்கு "பந்த சேவை' செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

Advertisement

தருமபுரிக்கு அருகில் உள்ள அதியமான் கோட்டையில் பைரவருக்கு தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.