தூய்மையானவனாக இரு. அதற்கும் மேலாக, நேர்மையுடன் இரு. ஒரு விநாடியும் இறைவன் மீது நம்பிக்கை இழந்து விடாதே! அப்போது நீ ஒளியைக் காண்பாய்.
-சுவாமி விவேகானந்தர்
என் கால்கள் உங்களுடைய திருத்தலங்களுக்குச் செல்வதிலும், என் கைகள் உங்களுக்குப் பூஜை செய்வதிலும், என் கண்கள் உங்களுடைய வடிவத்தைத் தரிசிப்பதிலும், என் மூக்கு உங்கள் பாதத்தில் அர்ச்சித்த துளசியை முகர்வதிலும், என் காதுகள் உங்களுடைய கதைகளைக் கேட்பதிலும் இன்புறுவதற்கு என்னுடைய துன்பங்களைப் போக்கி அருள் புரியுங்கள்.
-ஸ்ரீ நாராயணீயம்
எவன் எந்த வித்யையைக் கற்றிருக்கிறானோ, அதுதான் அவனுக்கு மேலான தெய்வம். அதைத்தான் அவன் பூஜித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதுதான் அவனுக்கு உதவி செய்யும்.
-விஷ்ணுபர்வம்
இறைவனுடைய பக்தர்கள் அவர் புகழைப் பாடுகிறார்கள். என்றாலும், எல்லையற்ற அவரை முழுமையாக அறிந்தவர்கள் யாரும் இல்லை. சமுத்திரத்தில் சேரும் ஓடைகள் அந்த சமுத்திரத்தின் ஆழத்தை எப்படி அறிய முடியும்?
-குருநானக்
வயோதிகமும் மரணமும் மனிதனுடைய ஆயுளை ஒவ்வொரு நாளும் அழிவை நோக்கி ஓட்டிச் செல்கின்றன.
-தம்மபதம்
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவதையை நம்பிக்கையுடன் வழிபட விரும்புகிறானோ, அவர்களின் அந்த நம்பிக்கையை நான் உறுதி உடையதாகச் செய்கிறேன்.
-பகவத்கீதை 7.21
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.