மணல்மேடு-வில்லியனல்லூர் -மயிலாடுதுறை சாலையில் கொண்டல் பாலம் தாண்டி அருவாப்பாடி சாலை பிரிகிறது. அதில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் அருவாப்பாடி ஊரை அடையலாம். சிறிய ஊர் மையத்தில் சிவன், மாரியம்மன் கோயிலும் இணைந்தே உள்ளன.
இங்கு ஒன்பது கோளில், சனீஸ்வரன் கையில் வில்லும் அம்பும் கொண்டு காட்சி தருகிறார். மிக சிறப்பான காட்சி சிறு கிராமத்தில் உள்ளதால் பிரபலம் ஆகவில்லை.
மொரட்டாண்டி, வழுவூர் போன்ற தலங்களிலும் இவ்வாறு காட்சி அளிக்கிறார். சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனி பகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழை பொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.