பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி போகும் வழியில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆஞ்சநேயர் சந்நிதியில் அமாவாசை அன்று வடை மாலை சாத்தினால் தீராத நோய்கள் நீங்கும்.
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி போகும் வழியில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆஞ்சநேயர் சந்நிதியில் அமாவாசை அன்று வடை மாலை சாத்தினால் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்
சித்தூர் அருகில் காணிப்பாக்கம் என்ற இடத்தில் சுயம்பு விநாயகர் கோயில் உள்ளது. நியாயமான வழக்குகளில் வெற்றியடைய இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். சக்தி வாய்ந்த விநாயகர்.
திருத்துறைப்பூண்டியில் உள்ள பெருமாள் கோயிலில் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு சந்நிதி அமைந்துள்ளது. பலருடைய கஷ்டங்களைத் தீர்த்து வைக்கும் சக்தி படைத்த ஆஞ்சநேயர். செல்வ வளம் பெருக இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
Advertisement
கரூர் அருகே தான்தோன்றி மலையில் அமைந்திருக்கும் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் விசேஷ அமைப்பு கொண்டது. இங்குள்ள பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
விருதுநகர் மாரியம்மன் கோயில், அம்மன் கோயில்களில் சிறப்பு வாய்ந்தது. மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்க இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.
பண்ருட்டி அருகே திருவதிகை என்ற இடத்தில் பழங்காலத்து சிவன் கோயில் உள்ளது. "சூலை நோய் தீர்த்த சிவன்' என்று இந்த இறைவனை அழைக்கிறார்கள். வயிறு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணம் சுவாமிமலை அருகே உள்ளது இன்னம்பூர். இந்த ஊரில் உள்ள அட்சர புரீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டால் பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.