சூடாமணி சூரிய கிரஹணம்
முழு மதிக்கும் (சந்திரன்), பூமிக்கும் இடையில் சூரியன் செல்லும்போது நிலவின் நிழல் பூமியின் மீது கருமையாகப் பதியும் இந்த அரிய வானியல் நிகழ்வையே சூரிய கிரஹணம் என்பர்.
முழு மதிக்கும் (சந்திரன்), பூமிக்கும் இடையில் சூரியன் செல்லும்போது நிலவின் நிழல் பூமியின் மீது கருமையாகப் பதியும் இந்த அரிய வானியல் நிகழ்வையே சூரிய கிரஹணம் என்பர். விஞ்ஞானிகள் சூர்ய கிரஹணத்தை, சோலார் எக்லிப்ஸ் என்றும், சந்திர கிரஹணத்தை, லூனார் எக்லிப்ஸ் என்றும் அழைக்கின்றனர்.
நிலவு பூமியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி சாய்ந்து இருப்பதால் கிரஹண நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதில்லை. கிரஹணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது ஒருசில இடங்களில் மட்டுமே விழுவதால் அப்போது அதனைக் காண இயலாது. அதனால் பூமி இருக்கும் நிலையைப் பொறுத்து சூரிய கிரஹணம் எந்த நாளில், எந்த நேரத்தில், எந்தெந்த இடங்களில் தெரியும் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மிகத்துல்லியமாக நம் தவ ஞானிகளும் சித்தர்களும் என்றோ கணித்து வைத்திருந்த வானியல் சாத்திரம் ஒரு துளி கூடப் பிசகாமல்/பிறழாமல் அப்படியே நிகழ்வதைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகள் நவீன கருவிகள் உதவியுடன் ஒப்பிட்டு சரியாய் உள்ளது என வியக்கிறார்கள்.
அநேகமாக பெளர்ணமி அன்று சந்திர கிரகணமும், அமாவாசை அன்று சூரிய கிரகணமும் ஏற்படுவது வழக்கம். நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்களை நம் இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதமாக இதனை ஒரு கதையாக நமக்குக் கூறியுள்ளனர். அசுரர்கள் மற்றும் தேவர்கள் இருவரும் திருப்பாற்கடலிலிருந்து கிடைத்த அமிர்தத்திற்குச் சொந்தம் கொண்டாடினர்.
Advertisement
இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை முதலில் தேவர்களுக்கு கொடுத்துக் கொண்டே வந்தார். அனைத்து அசுரர்களும் அமிர்தத்தை மறந்து, மோகினியின் பேரழகில் மயங்கி நின்றனர். மிகவும் புத்திசாலியான, அசுர குலத்தில் உதித்த ராகு மட்டும் மதிமயங்காமல் தேவர்களுக்கு இடையே அவர்களைப்போல் அமர்ந்து அமிர்தத்தை அருந்திவிட்டார். இதனை சூரியனும், சந்திரனும் பார்த்து மோகினியிடம் சொல்ல, அவர் கோபமிகுதியால் ராகுவின் தலையைக் கொய்துவிட்டார்.
ஆனால் அமிர்தம் சாப்பிட்டதால் இறப்பில்லாத நிலை பெற்ற ராகுவின் தலையும், உடலும் உயிரோடு இருப்பதைப் பார்த்த நாராயணன், ராகுவின் வெட்டிய தலையை அருகிலிருந்த ஒரு பாம்பின் உடலுடன் இணைத்து ராகுவாகவும்; ராகுவின் உடலில் அந்த பாம்பின் தலையைப் பொருத்தி கேதுவாகவும்; இரண்டு கிரஹங்களை நவ கிரஹங்களுடன் இருக்கப் பணித்தார். அதனால் ராகுவிற்கும், கேதுவிற்கும் சூரிய, சந்திரர்களின் மேல் உட்பகை கணன்று கொண்டே இருந்தது. வருடத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ ராகு மற்றும் கேது கிரகங்கள் இருவரும் சூரியனையும் சந்திரனையும் வெளியே தெரியவிடாமல் அவர்களை ஒட்டி வந்து மறைக்க ஆரம்பித்தார்கள். இந்த நாளையே "கிரஹண காலம்' எனப் பெயரிட்டனர் நம் முன்னோர்கள்.
பலசாலியான ராகுவும், கேதுவும் மூர்க்க குணம் அதிகமுள்ளவர்கள் ஆதலால், அவர்களால் கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பிறந்து சில காலமே ஆன கைக்குழந்தை மற்றும் அதன் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அந்த நேரத்தில் வெளியில் வரக்கூடாது என சில கட்டுப்பாடுகள் வகுத்தனர். இதனை நாமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வருகிறோம். இப்போது விஞ்ஞானிகள் ஒரு வகையான நச்சுக் கதிர் இந்த நேரத்தில் மிக அதிகமாக வீசுவதால் நம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது எனக் கூறுகின்றனர். இந்த நச்சுத் தன்மையை போக்கும் விதமாக கிரஹண காலத்தில் சமைத்த உணவுப் பண்டங்களின் மீது மருத்துவக் குணம் கொண்ட தர்ப்பையை கிள்ளிப்போடுவது வழக்கம்.
இம்முறை வரும் சூடாமணி சூரிய கிரஹணத்தில் நாம் செய்யும் அனைத்து வகையான ஜெபங்களும், பாராயணங்களும், சிறு சிறு மந்திரங்களும்கூட; ஏன் ராம நாமம், சிவ நாமம் உள்பட பிழையில்லாமல் செய்தால், பல கோடி முறை செய்தால் கிட்டும் பலன், ஒருமுறை செய்தாலே நம்மை வந்தடையும் என வேத சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
சூரியனின் வெளிச்சத்தை சந்திரன் மறைக்கும்போது, அதனால் ஏற்படும் எதிரொலிதான் வைர மோதிரம் போல் காட்சியளிக்கும். இந்த நிகழ்வானது ஆப்பிரிக்கா, காங்கோ, எதியோப்பியா, தெற்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் முழுமையாக, குறிப்பாக உத்தரபிரதேசம், ப்ரயாக்ராஜில் (அலஹாபாத்) அதாவது சுமார் இரண்டேமுக்கால் மணி நேரம் இந்த ஆதவனின் அபூர்வ அஸ்தமனம் முழுமையாகத் தெரியும் என வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இப்போது வரும் சூரியகிரஹணம் ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களைப் பிடிப்பதால் அந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் மேற்கொண்டு பலனைப் பெறுவோம்; அந்த பகலவனைப் பணிவோம்.
இந்த ஆண்டு சூரிய கிரகணம் இரண்டு முறையும், சந்திர கிரகணம் மூன்று முறையும் ஏற்படுகிறது. அதில் இந்த தமிழ் சார்வரி வருடத்தில் சூரிய கிரஹணம் முதல் முறையாக வருகிறது. அரிய வானியல் நிகழ்வான இந்த சூடாமணி சூரிய கிரஹணம் (தண்ய்ஞ் ர்ச் ஊண்ழ்ங்) வரும் ஞாயிறு 21.6.2020 காலை 10:22 மணிக்குத் (ஸ்பரிசம்) தொடங்கி மதியம் 11:59 மணிக்கு (மத்திமம்) விரிவடைந்து பின் மதியம் 01:42 மணிக்கு (மோக்ஷம்) முடிவடைகிறது. அடுத்து இந்த ஆண்டில் டிசம்பர் 14-ஆம் தேதி அன்று ஒரு சூரிய கிரஹணம் நிகழ
விருக்கிறது.