வெள்ளிமணி

பொன்மொழிகள்!

மூன்று உலகங்களிலும் முக்கிய மந்திரமாக இருப்பது "இராம' என்ற சிறப்புப் பொருந்திய பெயர்; தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தன்னையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவது "இராம' என்ற

சுவாமி கமலாத்மானந்தர்

மூன்று உலகங்களிலும் முக்கிய மந்திரமாக இருப்பது "இராம' என்ற சிறப்புப் பொருந்திய பெயர்; தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தன்னையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவது "இராம' என்ற சிறப்புப் பொருந்திய பெயர்; இந்தப் பிறவியிலேயே இனி வரும் ஏழு பிறவி என்ற நோய் வராமல், தடுக்கவல்ல உயர்ந்த மருந்து போன்றது "இராம' என்ற சிறப்புப் பொருந்திய பெயர். அந்தப் பெயரைத் தன் கண்களால் அந்த அம்பில் வாலி கண்டான்.

- கம்ப ராமாயணம்,
(கிட்கிந்தா காண்டம், 305)

மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகவும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் மனிதர்கள் தங்களின் புண்ணிய பாவங்களாகிய செய்கையால் இந்தப் பிறவியிலிருந்து மேலே செல்லவும் முடியும், கீழே போகவும் முடியும்.

- பாம்பன் சுவாமிகள்

வேள்விகள் சடங்குகள் ஆகிய தோணி மிகவும் பலவீனமானது. இதைவிட, பிரம்மத்தை அனுபூதியில் உணர்ந்துகொள்வதற்கு, மேலான வேறு ஒரு சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.

பிரம்மஞானம் என்பது முக்தி. அக்ஞானத்தை அகற்றுவதுதான் முக்தி. பிரம்மத்தை அனுபூதியில் உணர்ந்துகொள்ளும்போதுதான் அக்ஞானம் நீங்கும். வேதாந்தத்தின் உட்பொருளை அனுபூதியில் உணர்ந்துகொள்வதற்கு, "ஓம்' என்று ஜபம் செய்வதே போதுமானது.

- சுவாமி விவேகானந்தர்
("விவேகானந்தரின் ஞானதீபம்', தொகுதி 2, பக். 407)

எவன் ராமனிடம் பாராமுகமாக இருக்கிறானோ, அவனுடைய செல்வமும் வல்லமையும் நிலைத்திருக்காது.

-துளசிதாசர், ராமசரித மானஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT