வேதங்களைக் கற்பதால் மட்டும், அல்லது தவம் செய்வதால் மட்டும் ஒருவன் நன்னடத்தையைப் பெற மாட்டான். எவனுடைய செயல்களில் உயர்ந்த கல்வியும் தவமும் வெளிப்படுகிறதோ, அவனே நன்னடத்தை உடையவன்.
-யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
மனிதன் தன்னுடைய தலை, கை முதலிய உறுப்புகளைத் தன்னில் வேறாகக் கருதுவதில்லை. அது போலவே என்னைப் பரம்பொருளாக அனுபூதியில் உணர்ந்தவன், ஜீவர்களை என்னில் வேறாகக் கருதுவதில்லை
-ஸ்ரீபகவான் ஹரி தக்ஷப் பிரஜாபதிக்குக் கூறியது
ஒருவன் ஆன்மிக சாதனை செய்ய ஆரம்பித்த பிறகு, அதை நடுவில் நிறுத்தக் கூடாது. எப்படி நெருப்பு மெல்ல மெல்லக் கொழுந்து விட்டெரிய ஆரம்பிக்கிறதோ, அதைப் போல ஆன்மிகசாதனையை அவன் மெல்ல மெல்லப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவனிடம் ஞானம் சூரியனைப் போன்று பிரகாசிக்க ஆரம்பிக்கும்.
-மகாபாரதம்
ஏ மூடனே! செல்வத்தின் மீது நீ கொண்டிருக்கும் ஆசையை விட்டுவிடு. உன் உள்ளத்தில் பாரபட்சம் இல்லாமல் சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணத்தை வளர்த்துக்கொள். உன் சொந்த முயற்சியால் சம்பாதிக்கும் சிறிதளவு செல்வமாயினும் அதைக் கொண்டு மனத்திருப்தி பெறு.
-ஸ்ரீஆதிசங்கரர்
தான் செய்த வினை காரணமாக, எந்த ஓர் ஆன்மாவும் விலங்காகவோ மனிதனாகவோ தேவனாகவோ பிறவி எடுக்கிறது.
-மகாவீரர்
எவருடைய மனதில் மற்றவர்களின் நன்மை மட்டும் இடம் பெற்றிருக்கிறதோ, அவருக்கு உலகத்தில் கிடைப்பதற்கு எதுவுமே கஷ்டமானதல்ல; உலகில் எல்லாமே அவருக்குக் கிடைத்துவிடும்.
-துளசிதாசர் இயற்றிய,"ராமசரித மானஸ்'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.