வெள்ளிமணி

பொன்மொழிகள்!

அறநெறிகளை அறிந்துகொள்ளுங்கள்! வாழ்க்கை நிலையாமையை அறிந்து காலனுக்குப் பயப்படுங்கள்! பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!

சுவாமி கமலாத்மானந்தர்

அறநெறிகளை அறிந்துகொள்ளுங்கள்! வாழ்க்கை நிலையாமையை அறிந்து காலனுக்குப் பயப்படுங்கள்! பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள்! நற்குணங்களை நன்கு வளர்த்துக்கொள்ளுங்கள்! கபடத்தன்மையை வெறுத்து ஒதுக்குங்கள்! தீயசெயல்களைச் செய்யும் தீயவர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! தினமும் நல்லோர் கூறும் அறவுரைகளைக் கேட்டுத் தெளியுங்கள்!

-நாலடியார்

நல்ல தலைவர் எத்தகைய கொடிய சொற்களைக் கூறினாலும், முடிவில் அது நன்மையைத் தருவதால் இனிய சொல்லாகும். தீயவரின் இனிமையான சொல்லும் பின்னால் தீமை விளைவிப்பதால் அது நஞ்சே ஆகும்.

தீயைப் போன்று சுடுகின்ற வெங்காரம் என்ற ஒரு மருந்து கொடியதாகக் காணப்பட்டாலும், அது நோயைப் போக்கி உடல் நலத்தைத் தரும். சில விஷங்கள் உட்கொண்டவுடன் உடல் சிலிர்க்குமாறு குளிர்ச்சியைத் தரும் என்றாலும் பின்பு மனிதனைக் கொன்றுவிடும்.

-நீதிநெறி விளக்கம்

கபடத்தின் மூலமாகவும், கெட்ட உபாயங்கள் மூலமாகவும் கைகூடுகிற காரியங்களில் மனதைச் செலுத்தக் கூடாது.

-விதுரநீதி

உண்மையில் "உலகபந்தம்' என்ற ஒரு கட்டு இல்லை. என்றாலும் ஐம்புலன்கள் உலக இன்பங்களை நுகர விரும்பும்போது, பந்தம் தீவிரமாகி இறுக்கமாகப் பிணைத்துக் கட்டுகிறது. உலக ஆசைகள் குறையக் குறைய, உலகபந்தம் என்ற கட்டும் மெல்ல மெல்ல அவிழ்ந்து போகிறது.  

-யோகவாஷிட்ட சாரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT