வெள்ளிமணி

பொன்மொழிகள்!

DIN


தன் குலம் விருத்தியடைவதில் விருப்பமுள்ளவன், உறவினர்கள் விருத்தியடையவதில் ஊக்கம் காட்ட வேண்டும்.    
-விதுரநீதி

அதிகமான வெயில் காலங்களில் தூரத்தில் இருந்துபார்க்கும்போது, சாலையில் நீர் நிரம்பியிருப்பதுபோல் (கானல் நீர்) தோற்றமளிக்கும். ஆனால் அது மாயைத் தோற்றமாகும். அதை மான்குட்டி "உண்மையான தண்ணீர்' என்று நினைத்து ஓடி, இறுதியில் ஏமாந்து நீர்த்தாகம் நீங்காமல் உயிரைவிடும். அதுபோல, "உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் உண்மையானவை, அழியாதவை' என்று மக்கள் தவறாக நினைத்து இறுதியில் இறையருளைப் பெறாமலேயே அழிகின்றனர்.
-பாம்பாட்டிச் சித்தர்

ஈன புத்தியுடையவர்கள் உங்களுடைய வீட்டிற்கு வருவதற்கு இடம் கொடுத்தால், அதனால் நீங்கள் உங்கள் சுகத்தையும், பெருமையையும் இழந்து துன்பமடைய வேண்டி வரும்.
எப்படியெனில், ஓர் ஈயை வயிற்றுக்குள் போக இடம் கொடுத்தால், அதனால் எப்படித் துன்பம் உண்டாகிறதோ அதுபோல.
-யோகி வேமண்ணா 

முனிவர்களே! நீங்கள் எப்போதும் தூயவர்களுடன் சேர்ந்து பழக வேண்டும். தூயவர்களின் சத்சங்கத்தால் மனிதனுக்கு விரைவில் விஷ்ணுவிடம் பக்தி உண்டாகும். விஷ்ணு பக்தியால் சிறந்த ஞானம் ஏற்பட்டு, ஞானத்தால் விஷ்ணுபதத்தை அடைவான்
-ஹரிபக்திஸýதோதயம்

செருப்பு தங்கத்தால், நவமணிகளால் பதிக்கப்பட்டு மிகவும் அழகாகச் செய்யப்பட்டாலும்  அது காலில் அணிவதற்கு மட்டும்தான் பயன்படும். அதுபோலக் கீழ்மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும், நற்பண்புகள் இல்லாததால் கீழ்நிலையில் வைப்பதற்கு உரியவர்கள்.
-நாலடியார், கீழ்மை }7.

காலம் எல்லாப் பிராணிகளையும் "உலக ஆசைகள்' என்ற பெரிய ஒரு பானையில் போட்டிருக்கிறது; அதை இரவு பகல் என்ற விறகினால் காலம் எரித்து, மாதம் ருதுக்கள் என்ற கரண்டியினால் கிளறிச் சமைக்கிறது. இதுதான் நாம் பார்க்கும் உண்மை.
-யுதிஷ்டிரர்

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT