வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சுவாமி கமலாத்மானந்தர்

பொறுத்துக் கொள்ளும் மன ஆற்றல் இல்லாதவன் எவ்வளவு பெரிய பண்டிதன், தபஸ்சி, அறிவாளியாக இருந்தால் என்ன? அவன் ஒருபோதும் பகவானின் கிருபைக்கு உரியவனாக ஆக முடியாது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்

இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் பெருகிய துன்பங்களைத்தான் 
அனுபவிக்கிறார்கள். இந்த உலகில் பிறவாத பாக்கியசாலிகளான முக்தி பெற்றவர்கள், பேரின்பத்தில் நிரந்தரமாக ஆழ்ந்திருக்கிறார்கள். 

முதலில் கூறிய பிறவியானது, உலகப்பற்றின் காரணமாக உயிர்களை வந்தடைகிறது.

பின்னர் கூறிய பிறவாத பெருநிலையோ, உலகப்பற்றுகளை விட்டவர்களால் மட்டுமே அடைய முடியும்.    
-மணிமேகலை (அறவணஅடிகள் கூறியது)

நல்வினை, தீவினை இவையிரண்டில் யார் எதைச் செய்தாலும் அவரவர் செய்த வினைகள் அவரை நாடிச் சென்றடையும்.
-குதம்பைச் சித்தர்

""ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு'' என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனதினனாக இருக்க வேண்டும்; அம்பைப்போல் அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.
-முண்டக உபநிஷதம் -2.2.4

ஒருவர் செய்த உதவி தினை அளவே இருந்தாலும், சான்றோர்கள் அதைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவார்கள். பனை அளவு உதவி செய்தாலும், நன்றி உணர்வு இல்லாதவர்கள், அதை ஓர் உதவியாகவே நினைக்க மாட்டார்கள். 
 -நாலடியார், கீழ்மை -4

மனிதன்  சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருக்கிறான்; நிலையற்ற வாழ்க்கையை நிலையானதாக எண்ணி மரணமடைந்து மண்ணோடு மண்ணாகிறானே, என்ன மதியீனம்!
-பட்டினத்தார்

நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் ஒரு குறிக்கோளை நாம் அமைத்துக்கொண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும்.
-பெரிய புராணம்

உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்; வேறுபாடெல்லாம் ஆற்றலின் வெளிப்பாட்டில்தான் இருக்கிறது.
-சுவாமி விவேகானந்தர்

ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான இறையுலகம் வாய்க்கிறது. சூதும், பொய்யும் வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடைக்காது.
-பிரச்ன உபநிஷதம் 1.16

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT