முகப்பு
வெள்ளிமணி

பொன்மொழிகள்.. தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

நல்ல செயல்களைச் செய்தல், தவறான செயல்களைச் செய்யாமல் இருத்தல், நல்ல நம்பிக்கைகள், இறைவன் மீது பக்தி ஆகியவை "பண்டிதனின் குணங்கள்' என்று சொல்லப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பொன்மொழிகள்.. தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
பகிர்:

நல்ல செயல்களைச் செய்தல், தவறான செயல்களைச் செய்யாமல் இருத்தல், நல்ல நம்பிக்கைகள், இறைவன் மீது பக்தி ஆகியவை "பண்டிதனின் குணங்கள்' என்று சொல்லப்படுகின்றன.
- விதுரநீதி

உண்மையைச் சொல்வதே வானுலகமாகும், பொய் சொல்வதே மண்ணுலகமாகும். ஒழுக்கமே சொர்க்கமாகும், ஒழுக்கமின்மையே நரகமாகும். இதற்கு சிவபெருமானே நீயே சாட்சி.    
 -பசவண்ணர் (கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த மகான்)

எண்ணெய், தண்ணீர் ஆகிய இரண்டும் திரவங்களாக இருக்கின்றன. அவ்விதம் இருந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று கலக்காது. எண்ணெயைத் தண்ணீரில் ஊற்றினால் அது நீரின் மேலேயே நிற்கும். அது போல ஆசைகள் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்தாலும், அந்த ஆசைகளின் வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
-பாம்பாட்டிச் சித்தர்

நம் அனைவருடைய சிந்தனையும், செயலும் ஒன்றாக இருக்கட்டும். நம் அனைவருடைய மனம், சிறந்த ஞானவான்களின் சிந்தனையை ஒத்ததாக இருக்கட்டும். பொதுவான நோக்கத்திற்காக நாம் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்வோம்.
 -ஒரு சுலோகம்

யாகத்தில் பசுக்களை வதைப்பவர்கள், இருளில் மூழ்கி இருப்பார்கள்.
 -பஞ்சதந்திரம்

உண்மையான சிவனடியார்களையும், வேதம் ஓதும் வேதியரையும், நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெரியோர்களையும் மனதிற்குள்ளேகூட அமைதியாகத் திட்டாதே.
-கொங்கணச் சித்தர் 

ஸ்ரீராமா!  நான் உன்னை நினைப்பதைத் தவிர, வேறு ஒன்றும் அறியாதவன். இதைத் தவிர எனக்கு வேறு பிழைப்பு தெரியாதே!

நான் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். உன்னிடம் நான் வைத்திருக்கும் இந்த உறுதியான நம்பிக்கைதான் நான் பார்க்கும் உத்தியோகம். நீ என்னிடம் காட்டும் கிருபைதான் எனக்கு ஊதியம். இது எனக்குப் போதுமே!

இதுவே என்னை உன்னுடைய திவ்ய தேசமான பாத சந்நிதியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடாதா!                -மகான் தியாகராஜர்

ஒருவனுக்கு கல்வி கற்பித்த ஆச்சாரியார் அவனுக்குத் தெய்வமாகிறார்.
-நறுந்தொகை -1

 தன்னையே உயர்த்திப் பிறரைத் தாழ்த்திப் பேசுபவன் முன்னேறுவதில்லை.
-வியாத கீதை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments