சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் அது திடீரென ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் அது திடீரென ரத்து செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய 4 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக காவல் துறையிடமும் அனுமதி கோரி கடிதமும் வழங்கப்பட்டது. ஆனால் வில்லிவாக்கத்தில் 12 மணி முதல் 1.00 மணி வரையிலும், தி நகர் தொகுதியில் 2 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டும் பிரசாரம் செய்ய காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. காவல் துறையின் இந்த பதிலால் விஜய் தரப்பு சற்று அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
காவல் துறை கொடுத்த அனுமதியின் படி, வில்லிவாக்கத்தில் இருந்து தி.நகருக்கு விஜய் ஒரு மணிநேரத்தில் செல்ல வேண்டும். இதையடுத்து அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் பிரசாரம் செய்து முடிக்க போதுமானதாக இருக்காது எனக் கூறி விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
TVK leader Vijay's campaign, which was scheduled to take place in Chennai today, has been suddenly cancelled.