முகப்பு
தமிழ்நாடு

சென்னை சைதாப்பேட்டையில் விஜய் பிரசாரம் ரத்து!

சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 6 ஏப்ரல் 2026, 7:12 pm IST
விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வில்லிவாக்கம், அண்ணா நகர் தொகுதிகளில் போதிய பாதுகாப்பின்மை காரணமாக விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சைதாப்பேட்டையில் ரத்தாகியுள்ளது.

சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்திற்கு 1 மணி நேரம் மட்டுமே காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதால் சைதாப்பேட்டை பிரசாரத்தை தவெக ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் சென்னை சைதாப்பேட்டை வேட்பாளரை ஆதரித்து நாளை (ஏப். 7) விஜய் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான அனுமதி கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் த.வெ.க சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரசாரத்துக்கு ஒரு மணிநேரம் மட்டுமே காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், சைதாப்பேட்டையில் நாளை நடைபெறவிருந்த பிரசாரத்தை தவெக ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினர் அனுமதி அளித்த பிறகு, வரும் 7 அல்லது 8 ஆம் தேதியில், விஜய் அங்கு பிரசாரம் செய்யவுள்ளார்.

summary

Tn Election 2026 Vijay's Campaign in Saidapet, Chennai, Cancelled

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.