முகப்பு
வெள்ளிமணி

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரப்போகுது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (பிப்.4 - 10)

12 ராசிகளுக்கும் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரையிலான வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

12 ராசிகளுக்கும் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரையிலான வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரின் மத்தியில் ஆதரவு பெருகும் நேரமிது. அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் உதவிகளைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிட்டும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் தரமான பொருள்களைத் தேர்ந்தெடுத்து வியாபாரத்தைப் பெருக்கவும். கூட்டுத் தொழிலில் வெற்றி வாய்ப்பு கிட்டும். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கால்நடைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

அரசியல்வாதிகள் பொது சேவைகளில் ஈடுபட்டு மனநிறைவு காண்பீர்கள். மேலிடத்திடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பொருளாதார நிலையில் ஏறுமுகம் காண்பீர்கள். தக்க சமயத்தில் சக கலைஞர்களின் உதவி கைகொடுக்கும். பெண்மணிகள் உடல் நலத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கணவரிடம் பேசும்பொழுது கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகள் சக மாணவர்களுடன் வம்பு வழக்குகளில் ஈடுபடவேண்டாம். வெளிநாடு சென்று படிக்கும் முயற்சியைத் தீவிரப் படுத்துவீர்கள். 

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 05. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் கற்பனை ஆற்றல் கூடும் நேரமிது. மனதில் தெளிவு உண்டாகும். செயல்களில் புதிய உத்வேகம் பிறக்கும். வருமானம் பலவழிகளில் வந்து சேரும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். கூட்டுத் தொழிலை தவிர்த்து தனியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி அதிகரித்து லாபம் கூடும். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகள் பேசும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்கள் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் பெற்றோரின் மனநிலையை அறிந்து செயல்பட வேண்டும். நண்பர்களுடன் வீணாகப் பொழுதைக் கழிக்க வேண்டாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 05, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடும் நேரமிது. தோற்றப் பொலிவு கூடும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். 

உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்வீர்கள். அதற்கான நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகளால் சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். வியாபாரிகள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் அதிகரிக்கும். மேலிடத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையும் நன்றாக உயரும். 
பெண்மணிகளுக்கு கணவருடன் பாசம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேற்றுமை உண்டாகி பிறகு சமாதானம் ஆவீர்கள். மாணவமணிகள் கடின உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வருங்காலக் கனவுகள் பூர்த்தியாவதற்கு முயற்சி எடுக்கவும்.

பரிகாரம்: "நமசிவாய' என்று 108 முறை ஜெபிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும் நேரமிது. குழந்தைகளால் நலன் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு மூலம் நல்ல செய்திகள் வரும். செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். பயணத்தால் நன்மை உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் ரகசியங்களை வெளியிட வேண்டாம். வியாபாரிகளுக்கு போட்டி பொறாமைகள் குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை இப்போது எடுக்க வேண்டாம். கால்நடைகளால் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். 

அரசியல்வாதிகள் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை இனம்கண்டு எச்சரிக்கையாக இருந்து வரவும். எவ்வகையிலும் உங்கள் அந்தஸ்து பாதிக்கப்படாது. கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களுக்கு தாராளமாக உதவி செய்வீர்கள். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகள் அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிக்கவும். உடல்நலம் பேண யோகா, பிராணாயாமம் செய்து வரவும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 05, 07. 

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

எதிர்ப்புகளை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நேரமிது. அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும். முன் பின் தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமாக நடந்து கொள்ளவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு விற்பனை முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பீர்கள். கால்நடைகளாலும் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உங்கள் திறமைகள் முழுமையாக வெளிப்படும். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. குடும்பத்தில் சில குழப்பங்கள் நேரிடும். சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 08. 

சந்திராஷ்டமம்: 04, 05, 06.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரமிது. உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்ப்புகள் மறையும். செய்தொழிலில் வெற்றிப் படிகளை எட்டுவீர்கள். உங்களின் எண்ணங்கள் ஈடேறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சில இடையூறுகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரிகள் எதிலும் அகலக்கால்  வைக்காதீர்கள். 

வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வியாபாரம் செழிக்கும். விவசாயிகள் கால்நடைகளுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுத்து நல்ல மகசூல் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி வாகை சூடி செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தாமதமாக பெறுவீர்கள். பொருளாதார நிலையில் சற்று சிரமம் ஏற்படும். 

பெண்மணிகள் கணவரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் விடாமுயற்சியால் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 05, 09. 

சந்திராஷ்டமம்: 07, 08.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் மன உற்சாகம் பெருகும் நேரமிது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். புதியவர்களிடம் ஜாக்கிரதையாகப் பழகவும். பயணங்களின் போது பாதுகாப்பாக இருக்கவும். வீண் வம்பு வழக்குகளில் தலையிடாதீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து லாபம் கூடும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகும். புதிய தானியங்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலம் உண்டாகும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக காரியங்களைச் சாதிப்பீர்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். கலைநிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். சக கலைஞர்களின் நட்பை மதிப்பீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். குழந்தைகள் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவீர்கள். மாணவர்களின் திறமை பளிச்சிடும். பெரியவர்களின் அறிவுரைகளை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 06, 07. 

சந்திராஷ்டமம்: 09, 10.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும் நேரமிது. உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகள் புதுப் புது யுக்திகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் நன்கு சிந்தித்து காரிய மாற்றுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

பெண்மணிகள் தங்களது உற்றார் உறவினர்களில் உண்மையான அன்பு உடையவர்களைக் கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகள் சூழ்நிலைக்கேற்ப சக மாணவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பாடங்களைப் படிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 08. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் எண்ணங்களில் தெளிவு பிறக்கும் நேரமிது. முன்னேற்றத்திற்குத் தேவையான புதிய பயிற்சிகளை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலை உருவாகும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அதிகரிக்கும். நுட்பமான புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து லாபம் பெருகும். நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள். மகசூல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்வீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் உதவியால் புதுப்புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சற்று உயரும். 

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பு சம்பந்தமாக நண்பர்களுடன் கலந்தாலோசனை நடத்துவீர்கள். வீண்வம்பு வழக்குகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 09, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செல்வாக்கும், மதிப்பும் உயரும் நேரமிது. உங்களின் கற்பனை ஆற்றல் கூடும். மனதில் தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் வேகம் கூடும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகவும். அலுவலக நிமித்தம் வெளிநாடு செல்ல நேரும். வியாபாரிகளுக்கு போட்டி பொறாமைகள் விலகும். கூட்டுத் தொழிலில் வெற்றி வாய்ப்பு கிட்டும். புதிய வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதுப் புது குத்தகைகளை எடுப்பீர்கள். நீர்வரத்து அதிகம் இருப்பதால் விளைச்சல் பெருகி லாபம் கூடும். 

அரசியல்வாதிகள் பலருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். பயணம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கை வந்து சேரும். உங்கள் திறமைகள் முழுமையாக வெளிப்படும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செல்வாக்கும், மதிப்பும் உயரும். சுப காரியங்களை நடத்தி வைப்பீர்கள். உற்றார் உறவினர்களும் உதவி புரிவார்கள். 
மாணவமணிகளுக்கு சிந்தனையில் புதிய தெளிவு உண்டாகும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 04, 09. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நல்லவர்களின் தொடர்பும், அதனால் நல்ல பயனும் உண்டாகும் நேரமிது. சமூகத்தில் உங்கள் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். செய்தொழிலில் விருத்தி அடைவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கும் சூழல் உருவாகும்.  

உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பால் நற்பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களின் நட்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தியடையும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கால்நடைகளாலும் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புகளை வென்று சாதனை படைப்பீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமைந்து வெற்றிகள் குவியும். சக கலைஞர்களை அன்புடன் நடத்துவீர்கள். பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 
மாணவமணிகள் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் சொல்கேட்டு நடக்கவும்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 04, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்களின் பொருளாதார நிலை உயரும் நேரமிது. சமூக நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மற்றவர்களால் புகழப்படுவீர்கள். நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரிகள் மந்த நிலை விலகி, சுறுசுறுப்பாக வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருவாய் அதிகமாகும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பயணங்களால் நன்மை அடைவீர்கள். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பணவரவு சரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். அவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

பரிகாரம்: "ராம ராம' என்று 108 முறை ஜெபித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →