முகப்பு
வெள்ளிமணி

புதன், கேது பகவான்களின் சங்கமம் ஈயும் மகா தன யோகம்!

"மாயோனாகிய மஹாவிஷ்ணுவின் முழுமையான சாயை எனத் திகழும் புத பகவானின் மாண்பை மூவராலும், தேவராலும், யாவராலும் பகர வொண்ணாது!' என்கிறது சப்தரிஷி சம்மேளனம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

"மாயோனாகிய மஹாவிஷ்ணுவின் முழுமையான சாயை எனத் திகழும் புத பகவானின் மாண்பை மூவராலும், தேவராலும், யாவராலும் பகர வொண்ணாது!' என்கிறது சப்தரிஷி சம்மேளனம்.

சூரிய சங்கமத்தால் சிறிதும் சேதம் அடையாத கிரகம் புத பகவான் ஒருவர்தான் என்பது மட்டுமல்ல; அதேசமயம் "மறைந்த புதன்; நிறைந்த மதி' என ஜெயமினி சூத்திரமும் பகர்வது போல், கூடுதல் யோக வலுவையும் அவர் பெறுவதால்தான் புகழ்மிக்க ஜோதிட மாமேதைகள், கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள், நிலப்பிரபுக்கள் எனப் பெரும் செல்வந்தர்களின் பட்டியலுக்கான காரணம், ஜாதகத்தில் மேற்படி சங்கமம் தரும் விசேஷத்துவமே என்று பராசர முனிவர் 
கூறுகிறார்.

செவ்வாய், புத பகவான்களின் சங்கமம் பெருந்தனவான்கள், நுண்மதியாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் தோன்ற உதவுகிறது.

செவ்வாய், புதன், குரு பகவான்களின் சங்கமம் புகழ்மி வேத விற்பன்னர்கள், அருளாளர்கள், இசை மேதைகள் தோன்ற உதவுகிறது.

புதன், குரு, சுக்கிர பகவான்களின் சங்கமம் செüபாக்கியங்கள் சுகபோகங்கள் செழித்தோங்க உதவுகிறது.

புதன், குரு, சனி பகவான்களின் சங்கமம், சத்தியவாக்கு உடையவர்களையும், மரண வாயிலில் சிக்கியவர்களை மீட்டருளும் வைத்தியர்களையும் தோற்றுவிக்கிறது.

புதன், ராகு பகவான்களின் சங்கமம் தாயாதிகள் (ங்காளி), தனத்துவம் செழித்தோங்க உதவுகிறது.

புதன், கேது பகவான்களின் சங்கமம் தனம் (இரண்டாம் வீடு), பாக்கியம் (ஒன்பதாம் வீடு), லாபம் (பதினொன்றாம் வீடு) இவைகளில் ஒன்றில் மிளிரும் பொது வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் எதிர்பாராத காலத்தில் தானாகவே தன்னிச்சையாகவே வந்து சேர்ந்துவிடும். இதை "மகா தன யோகம்' என்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.