தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இது 18 அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாகும்.
தமிழின் உயிர் எழுத்துகள் 12 என்பதைக் குறிக்கும் வகையில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடியாகவும், மெய் எழுத்துகள் 18 என்பதைக் குறிக்கும் வகையில் பீடத்தின் உயரம் 18 அடியாகவும், உயர்மெய் எழுத்துகள் 216 என்பதைக் குறிக்கும் வகையில் கோபுரத்தின் உயரம் 216 அடியாகவும் உள்ளன. மொத்த எழுத்துகள் 247 என்பதை உணர்த்துகிறது.
ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார் 236 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாகக் கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. கோயிலைக் கட்டிய சோழப் பேரரசரான ராஜராஜன் இதில் எங்குமே தனது பெயரை பொறித்துகொள்ளவில்லை. அதேநேரம் தலைமைச் சிற்பியான குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சனின் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலவர் சிவ லிங்கத்துக்கு அடியில் மிகப் பெரிய அளவில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் மூலவர் மண்டபத்தில் வெயில் காலத்தில் குளிர்ச்சியான தன்மையும், குளிர்காலத்தில் வெப்பமான தன்மையும்
பக்தர்களால் இன்றளவும் உணரப்படுகிறது.
ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.