வார பலன்கள் 
வெள்ளிமணி

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

கே.சி.எஸ். ஐயர்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச. 19 - 25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலை விரி​வு​ப​டுத்த பய​ணங்​க​ளைச் செய்​வீர்​கள். ஆரோக்​கி​யத்​தில் கவ​னம் செலுத்​து​வீர்​கள்.

உத்​தி​யோ​கஸ்​தர்​க​ளுக்கு அலு​வ​ல​கத்​தில் ஊழி​யர்​க​ளின் ஆத​ர​வும் ஒத்​து​ழைப்​பும் கிடைக்​கும். வியா​பா​ரி​கள் புதிய முத​லீ​டு​க​ளைச் செய்து லாப​ம​டை​வீர்​கள். விவ​சா​யி​கள் மாற்​றுப்​ப​யிர்​க​ளைப் பயி​ரி​டு​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் கட்சி ரக​சி​யங்​களை வெளி​யில் பேச​வேண்​டாம். கலைத்​து​றை​யி​னர் சக கலை​ஞர்​க​ளுக்கு முன்​னு​தா​ர​ண​மாக நடப்​பீர்​கள். பெண்​கள் கடின உழைப்​புக்கு நடுவே தக்​க​நே​ரத்​தில் ஓய்​வெ​டுப்​பீர்​கள். மாண​வர்​கள் வெளி​வி​ளை​யாட்​டுப் போட்டி​க​ளில் வெற்றி பெறு​வீர்​கள்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - டிசம்​பர் 19

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொ​ழி​லில் புதிய இலக்​கு​களை நிர்​ண​யித்​துக் கொண்டு செய​லாற்​று​வீர்​கள். சிக்​க​ன​மாக இருந்து சேமிப்​பு​க​ளைக் கூட்டிக் கொள்​வீர்​கள். அரசு விஷ​யங்​க​ளில் இருந்த தாம​தம் வில​கும்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் அலு​வ​ல​கச் சூழ்​நிலை அறிந்து செயல்​ப​டு​வீர்​கள். வியா​பா​ரி​கள் புதிய முறை​யில் கடையை அலங்​க​ரிப்​பீர்​கள். விவ​சா​யி​க​ளுக்கு மக​சூல் நன்​றாக இருக்​கும்.

அர​சி​யல்​வா​தி​க​ளின் மீதான வதந்​தி​கள் மறை​யும். கலைத்​து​றை​யி​னர் பிற​ருக்கு உதவி செய்து மகிழ்​வீர்​கள். பெண்​கள் யோகா, பிரா​ணா​யா​மம் போன்​ற​வற்​றைக் கற்​றுக் கொள்​வீர்​கள். மாண​வர்​கள் உடற்​ப​யிற்​சி​யில் தவ​றாது ஈடு​ப​டு​வீர்​கள்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - டிசம்​பர் 20, 21

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

ம​னக்​கு​ழப்​பம், சஞ்​ச​லங்​க​ளில் இருந்து விடு​ப​டு​வீர்​கள். கவ​னம் சித​றா​மல் உழைப்​பீர்​கள். குழந்​தை​க​ளின் எண்​ணங்​க​ளைப் புரிந்து கொள்​வீர்​கள்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் புதிய வேலைக்கு மாறு​வீர்​கள். வியா​பா​ரி​கள் சில சலு​கை​களை அறி​வித்து லாபத்தை மேம்​ப​டுத்​து​வீர்​கள். விவ​சா​யி​கள் புதிய சந்​தை​யில் பொருள்​களை விற்​பீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் கடி​ன​மாக உழைத்து கட்சி​யில் புதிய பத​வி​க​ளைப் பெறு​வீர்​கள். கலைத்​து​றை​யி​ன​ரின் திற​மை​கள் வெளிப்​ப​டும். பெண்​கள் கண​வனை அனு​ச​ரித்து நடந்​து​கொள்​வீர்​கள். மாண​வர்​கள் தங்​க​ளின் தனிப்​பட்ட தேவை​களை நிறை​வேற்​றிக் கொள்​வீர்​கள்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - டிசம்​பர் 22, 23, 24.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

​தொ​ழில் சீரா​கவே நடக்​கும். வாக்​கு​றுதி கொடுக்​கும்​போது கவ​ன​மாக இருப்​பீர்​கள்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் அலு​வ​ல​கத்​தில் கடு​மை​யாக உழைத்​துப் பாராட்​டு​க​ளைப் பெறு​வீர்​கள். வியா​பா​ரி​கள் எதி​லும் அக​லக்​கால் வைக்​கா​மல் வியா​பா​ரத்தை நடத்​து​வீர்​கள். விவ​சா​யி​கள் புதிய சந்​தை​களை நாடிச் செல்​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் மற்​ற​வர்​க​ளி​டம் பேசும்​போது சிந்​தித்​துப் பேசு​வீர்​கள். கலைத்​து​றை​யி​ன​ருக்கு கிடைக்​கும் பாராட்​டு​கள் மன​துக்கு மகிழ்ச்சி அளிக்​கும். பெண்​கள் குடும்​பத்​தின் மேன்​மை​யைக் காப்​பாற்​று​வீர்​கள். மாண​வர்​க​ளுக்கு படிப்​பில் ஆர்​வம் அதி​க​ரிக்​கும்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - டிசம்​பர் 25.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழி​லில் மேன்மை உண்​டா​கும். வரு​மா​னத்​தில் படிப்​ப​டி​யான உயர்​வு​க​ளைக் காண்​பீர்​கள்.

உத்​தி​யோ​கஸ்​தர்​க​ளி​டம் இருந்த அவ​நம்​பிக்​கை​கள் அக​லும். வியா​பா​ரி​கள் கூட்டா​ளி​க​ளின் உத​வி​யு​டன் கடன்​களை அடைத்​து​வி​டு​வீர்​கள். விவ​சா​யி​கள் புதிய குத்​த​கை​க​ளைத் தேடிப் பெறு​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் தொலை​தூ​ரச் செய்​தி​க​ளால் ஆனந்​தம் அடை​வீர்​கள். கலைத்​து​றை​யி​னர் அச​தி​கள் நீங்கி சுறு​சு​றுப்​பு​டன் கலைப்​ப​ணி​க​ளில் ஈடு​ப​டு​வீர்​கள். பெண்​க​ளுக்கு வீட்டில் சுப நிகழ்ச்​சி​கள் நடக்​கும். மாண​வர்​கள் ஆசி​ரி​யர்​க​ளின் அறி​வு​ரை​க​ளைக் கேட்டு நடப்​பீர்​கள்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - இல்​லை.​

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொரு​ளா​தா​ரம் சிறப்​பாக இருக்​கும். குடும்​பத்​துக்​குத் தேவை​யா​ன​வை​களை வாங்கி மகிழ்​வீர்​கள்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் அலு​வ​ல​கப் பணி​க​ளைச் சுறு​சு​றுப்​பு​டன் செய்து நற்​பெ​யர் எடுப்​பீர்​கள். வியா​பா​ரி​க​ளுக்கு கொடுக்​கல், வாங்​கல் லாப​க​ர​மாக இருக்​கும். விவ​சா​யி​கள் கால்​ந​டைப் பரா​ம​ரிப்​பு​க​ளுக்கு செலவு செய்​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு கட்சி மேலி​டத்​தின் ஆத​ரவு ஊக்​கு​விக்​கும். கலைத்​து​றை​யி​ன​ருக்கு பரி​சும் கெüர​வ​மும் பத​வி​க​ளும் கிடைக்​கும். பெண்​கள் உடன்​பி​றந்​தோ​ருக்கு உத​வி​க​ர​மாக இருப்​பீர்​கள். மாண​வர்​கள் கடமை உணர்ந்து செயல்​ப​டு​வீர்​கள்.

சந்​தி​ராஷ்​ட​மம் - இல்​லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சுப​கா​ரிய பேச்சு வார்த்​தை​கள் சாத​க​மா​கும். திற​மைக்​கான மதிப்​பு​கள் உண்​டா​கும். உத்​தி​யோ​கஸ்​தர்​கள் வேலை​களை குறித்த நேரத்​தில் முடித்​துக் கொடுப்​பீர்​கள். வியா​பா​ரி​கள் புதிய சந்​தை​க​ளில் பொருள்​களை விற்​பீர்​கள். விவ​சா​யி​க​ளுக்கு மக​சூ​லில் லாபம் அதி​க​ரிக்​கும்.

அர​சி​யல்​வா​தி​கள் கட்சி​யின் அனு​ம​தி​யு​டன் பய​ணங்​களை மேற்​கொள்​வீர்​கள். கலைத்​து​றை​யி​னர் துறை​யில் தங்​க​ளின் முழுத் திற​மை​யை​யும் வெளிப்​ப​டுத்​து​வீர்​கள். பெண்​க​ளுக்கு குடும்ப உறுப்​பி​னர்​க​ளின் ஒற்​றுமை மன நிறைவை ஏற்​ப​டுத்​தும். மாண​வர்​கள் பெற்​றோ​ருக்கு அனு​ச​ர​ணை​யாக இருப்​பீர்​கள்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்​கள் காரி​யங்​க​ளில் திட்ட​மிட்​டுச் செயல்​ப​டு​வீர்​கள். வழக்​கில் சாத​க​மான தீர்ப்பு உண்​டா​கும்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் மேல​தி​கா​ரி​க​ளின் பாராட்​டு​க​ளைப் பெறு​வீர்​கள். வியா​பா​ரி​க​ளின் பழைய கடன்​க​ள் வசூல் ஆகும். விவ​சா​யி​கள் கால்​ந​டை, பால் வியா​பா​ரத்​தில் நன்மை அடை​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் கட்சி மேலி​டத்​தின் கட்ட​ளை​களை உட​னுக்​கு​டன் நிறை​வேற்​று​வீர்​கள். கலைத்​து​றை​யி​ன​ருக்கு சக கலை​ஞர்​க​ளால் புதிய ஒப்​பந்​தங்​கள் கிடைக்​கும். பெண்​கள் யோகா, தியா​னம் போன்​ற​வற்​றைச் செய்​வீர்​கள். மாண​வர்​கள் உள்​ள​ரங்கு விளை​யாட்​டு​க​ளில் வெற்றி பெறு​வீர்​கள்.

சந்​தி​ராஷ்​ட​மம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழி​லில் புதிய பொறுப்​பு​கள் கிடைக்​கும். வெளி​நாட்​டுப் பயண வாய்ப்​பு​கள் சாத​க​மா​கும்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் அலு​வ​ல​கத்​தில் ஊதிய உயர்​வைப் பெறு​வீர்​கள். வியா​பா​ரி​க​ளுக்கு கொடுக்​கல் வாங்​க​லில் இருந்த தாம​தங்​கள் வில​கும். விவ​சா​யி​கள் மாற்​றுப் பயிர்​க​ளால் பய​ன​டை​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் உள்​கட்சி பூசல்​க​ளில் ஈடு​பட மாட்டீர்​கள். கலைத்​து​றை​யி​னர் பொரு​ளா​தா​ரம் உய​ரக் காண்​பீர்​கள். பெண்​கள் ஆரோக்​கி​யத்தை மேம்​ப​டுத்​திக் கொள்​வீர்​கள். மாண​வர்​கள் ஆசி​ரி​யர்​க​ளின் வழி​காட்​டு​த​லால் சிறப்​பா​கப் படித்து எதிர்​பார்த்த மதிப்​பெண்​க​ளைப் பெறு​வீர்​கள்.

​சந்​தி​ராஷ்​ட​மம் - இல்​லை.​

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது காரி​யங்​க​ளில் ஈடு​பாடு உண்​டா​கும். உற்​றார், உற​வி​னர்​கள் வழி​யால் ஆதா​யம் ஏற்​ப​டும்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் வீண் பேச்​சு​க​ளைத் தவிர்த்து வேலை​யில் கவ​னம் செலுத்​து​வீர்​கள். வியா​பா​ரி​கள் சிறிய அள​வில் முத​லீடு செய்து வியா​பா​ரத்தை விரி​வு​ப​டுத்​து​வீர்​கள். விவ​சா​யி​கள் புதிய குத்​த​கை​களை நாடிப் பெறு​வீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் சுறு​சு​றுப்​பாக கட்சிப் பணி​களை ஆற்​று​வீர்​கள். கலைத்​து​றை​யி​னர் சிறு சிறு வாய்ப்​பு​க​ளால் மீண்டு வரு​வீர்​கள். பெண்​க​ளுக்கு கண​வன் குடும்​பத்​தா​ரி​ட​மி​ருந்து எதிர்​பார்த்த உத​வி​கள் கிடைக்​கும். மாண​வர்​கள் விளை​யாட்​டில் வெற்​றி​வாகை சூடு​வீர்​கள்.

சந்​தி​ராஷ்​ட​மம் - இல்​லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழி​லில் புதிய இலக்​கு​களை எட்டு​வீர்​கள். போட்டி​க​ளி​லும் வெற்றி பெறு​வீர்​கள்.

உத்​தி​யோ​கஸ்​தர்​கள் கேலிப் பேச்​சுக்கு மதிப்பு கொடுக்​கா​தீர்​கள். வியா​பா​ரி​கள் ரொக்​கத்​திற்கே வியா​பா​ரம் செய்​யுங்​கள். விவ​சா​யி​கள் கொள்​மு​த​லில் லாபத்​தைக் காண்​பீர்​கள்.

அர​சி​யல்​வா​தி​கள் தொண்​டர்​க​ளுக்கு உதவி செய்து, அவர்​க​ளின் ஆத​ர​வைத் தக்க வைத்​துக் கொள்​வீர்​கள். கலைத்​து​றை​யி​னர் சவா​லான பணி​க​ளை​யும் துணிந்து செய்து முடிப்​பீர்​கள்.

பெண்​கள் எதிர்​கா​லம் சார்ந்த முடி​வு​க​ளை​யும் எடுப்​பீர்​கள். மாண​வர்​கள் ஆசி​ரி​யர்​க​ளி​டத்​தில் வளைந்து கொடுத்​துச் சென்று வெற்றி பெறு​வீர்​கள்.

சந்​தி​ராஷ்​ட​மம் - இல்​லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இனம் புரி​யாத கவ​லை​கள் தோன்றி மறை​யும். வர​வு​க​ளில் ஏற்ற இறக்​க​மான சூழல் உண்​டா​கும்.

உத்​தி​யோ​கஸ்​தர்​க​ளின் அலு​வ​லக வேலை​கள் தாம​த​மின்றி நடக்​கும். வியா​பா​ரி​க​ளுக்கு கூட்டுத் தொழி​லில் இருந்த நெருக்​க​டி​கள் நீங்​கும். விவ​சா​யி​க​ளுக்கு விவ​சா​யப் பணி​கள் அனைத்​தும் தாம​த​மின்றி நிறை​வே​றும்.

அர​சி​யல்​வா​தி​கள் கட்சி​யில் சாத​க​மான சூழ​லைக் காண்​பீர்​கள். கலைத்​து​றை​யி​னர் புதிய ஒப்​பந்​தங்​க​ளைத் தேடிப் பெறு​வீர்​கள். பெண்​க​ளுக்கு வெளி​யூ​ரி​லி​ருந்து அனு​கூ​ல​மான செய்​தி​கள் கிடைக்​கும். மாண​வர்​கள் போட்டி​க​ளில் சிறப்​பாக தேர்ச்சி அடை​வீர்​கள்.

சந்​தி​ராஷ்​ட​மம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT