வெள்ளிமணி

தவக்கோலம்...

தமிழ்நாட்டில் உள்ள மூன்றாவது குரு பரிகாரத் தலமாகும்.

ஜி. சுப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட தக்கோலம் அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயிலில், தமிழ்நாட்டில் உள்ள மூன்றாவது குரு பரிகாரத் தலமாகும்.

புராண வரலாற்றுடன் தேவாரப் பதிகம் பெற்று திகழும் திருவூரல் எனப்படும் தக்கோலத்தில் உள்ள இந்தக் கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களில் அபூர்வ "உத்கடிக' ஆசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் தட்சிணாமூர்த்தி சிறப்புமிக்கவர். வலது காலை தொங்கவிட்டு, இடது காலை குத்துக்காலிட்டு வலது கீழ் கை சின்முத்திரையுடன் மேல் கை ஜபமாலையைத் தாங்கி, இடதுகீழ்கை புத்தக ஏடு தாங்கியும் மேல் கை அக்னி ஜூவாலையுடனும் காலின் கீழ் நாகம், மான்களுடன் சற்றே தலையைச் சாய்த்துகொண்டு புன்னகை தவழும் திருமுகத்துடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் அபூர்வ திருக்கோலமாகும்.

"இங்கு வழிபடுவோருக்கு ஞானம், அறிவு, பேறுகள் நல்குகிறார். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் மேன்மை அடைய வைக்கிறார். வழக்குகளில் வெற்றியை அளிக்கிறார். வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தச் சந்நிதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை மாலை அணிவித்து, 14 தீபவிளக்குகள் ஏற்றி வழிபட்டால் வேண்டிய பலன் நிச்சயம் கிடைக்கும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

"எக்கோலம் போனாலும் தக்கோலம் போய்வா' என்ற சொல்வழக்கு இங்கு நிலவுகிறது.

- ஜி.சுப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

அடவி... பிரியங்கா சஹர்!

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT