தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக். 3 - 9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். கவனமாக உழைத்து முன்னேறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். வியாபாரிகள் வியாபாரத்தில் மேன்மையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்துமுடிப்பீர்கள். கலைத்துறையினர் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடமையே கண்ணாக நினைப்பீர்கள். தன்னம்பிக்கைக் கூடும். ஆடம்பரத்தைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பீர்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதைக் கூடும். கலைத்துறையினரின் படைப்புகள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறும். பெண்களுக்குத் தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வழக்குகளிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் திட்டமிட்டு முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்குப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். கலைத்துறையினர் நிதானமாக இருந்து புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் தங்கள் குடும்பத்தில் மழலைப் பேறைக் காண்பீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் - 3.
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளின் பணிகள் எதிர்பார்த்த திருப்பங்களைக் கொடுக்கும். கலைத்துறையினருக்கு வெளிவட்டாரத்தில் பெயரும் புகழும் உயரும். பெண்களுக்கு குடும்பச் சொத்து விஷயங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.
மாணவர்கள் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 4, 5.
உங்கள் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து செயல்படுவீர்கள். நெடு நாளாகத் தொடர்ந்த பிரச்னைகள் தீர்ந்து விடும். கடன்கள் வசூலாகும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளை நல்லமுறையில் எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்களின் இல்லம் தேடி உறவினர்கள் வருவார்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 6, 7.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்ய நேரிடும். புதிய கோணங்களில் சிந்தித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் சிறிய முதலீடு செய்து புதிய வியாபாரத்தில் இறங்குவீர்கள். விவசாயிகள் புழு, பூச்சி பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய தொண்டர்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் பெயர், பாராட்டுப் பெறுவீர்கள். பெண்மணிகள் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - 8, 9.
குடும்பத்தில் உங்கள் கை மேலோங்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு ஊக்கம் தரும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள். தேடி வரும். பெண்கள் குடும்பத்தில் நிலவும் அமைதியால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் மன நிலை அறிந்து செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள்.
கலைத்துறையினர் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ஆரோக்கியம், மனவளம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் கேலிப்பேச்சுக்கு செவிமடுக்க மாட்டீர்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க மாட்டீர்கள். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்திடம் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் நிகழும் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். எதிர்காலம் நிமித்தமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளியிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். விவசாயிகள் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள்.
மாணவர்கள் கடினமான பயிற்சிகளால் சாதனைக்கு வித்திடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குழந்தைகளின் குணநலன்களில் நல்ல மாற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகள் கூட்டுத் தொழிலை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மனதில் உள்ள ரகசியங்களை வெளிப்படுத்த மாட்டீர்கள். கலைத்துறையில் புதிய புதிய நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். பெண்மணிகள் ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்வீர்கள்.
மாணவர்கள் கல்வியில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவு தருவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சலிப்படையாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைபொருள்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
பெண்கள் இனிய தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற பெற்றோர் உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.