வெள்ளிமணி

லட்டு தேரில் அன்னபூரணி!

காசியில் கங்கைக் கரையில் விசுவநாதர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்

இணையதளச் செய்திப் பிரிவு

காசியில் கங்கைக் கரையில் விசுவநாதர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் அன்னபூரணி. அருகில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள்.

நடுநாயகமாக வீற்றிருக்கும் அன்னபூரணி இடது கையில் அமுதக் கலசமும், வலது கையில் கரண்டியும் ஏந்தி உலகுக்கு அமுதூட்டுகிறார். அவர் எதிரே நின்ற நிலையில் பரமேஸ்வரன் கபாலத்துடன் காட்சி தருகிறார். பார்வதி தேவியிடம் சிவன் பிட்சை ஏற்கும் அற்புதமான திருவுருவம்.

ஆண்டுக்கு ஒரு முறை நான்கு நாள்கள் அன்ன

பூரணியை பூரணமாக தரிசிக்கலாம். அப்போது அவள் தங்கமயமான அன்னபூரணியாகக் காட்சி தருகிறார். தீபாவளி அதாவது நரக சதுர்த்தசிக்கு முதல் நாளான பதிமூன்றாம் திதி நாளான தன திரயோதசி அன்று திரையிட்டு அன்னபூரணியை அலங்கரிப்பார்கள். அதன் பிறகு மூன்று நாள்கள் தங்க அன்னபூரணியை திரையின்றி தரிசிக்க முடியும்.

தீபாவளி புண்ணிய தினத்தன்று அன்னபூரணிக்கு தங்கக் குத்து விளக்கு ஏற்றுவார்கள். அப்போது ஈஸ்வரனுக்கு தங்கக் கரண்டியால் அன்னை அன்னம் வழங்கும் வைபவம் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும்.

தீபாவளிக்கு முந்தைய தன திரயோதசியன்று தங்க அன்னபூரணிக்கு பூஜைகள் உண்டு. ஆனால் திரையிட்டு விடுவதால் அம்பிகையை தரிசிக்க முடியாது. ஆனால், மறுநாள் தரிசனம் கிடைக்கும். அன்று பொரியுடன் நாணயம் பிரசாதமாக அளிக்கப்படும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தீபாவளியன்று அன்னபூரணிக்கு குபேர பூஜை மற்றும்

அன்னகூட் வைபவம் நடைபெறுகிறது.

தீபாவளியை முன்னிட்டு லட்டுகளால் செய்யப்பட்ட பெரிய தேரில் அன்னபூரணி பவனி வருகிறார். தீபாவளியன்று அன்னபூரணியை தரிசிப்பது வெகுசிறப்பு!

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT