நைஜரில் வெளிநாட்டவர்கள் கடத்தல்
நியாமி,ஜன.8: ஆப்பிரிக்க நாடான நைஜரில் பிரான்ஸ் நாட்டவர் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். நைஜரின் தலைநகர் நியாமியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்க
உலகம்நைஜரில் வெளிநாட்டவர்கள் கடத்தல்
நியாமி,ஜன.8: ஆப்பிரிக்க நாடான நைஜரில் பிரான்ஸ் நாட்டவர் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். நைஜரின் தலைநகர் நியாமியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்க
நியாமி,ஜன.8: ஆப்பிரிக்க நாடான நைஜரில் பிரான்ஸ் நாட்டவர் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
நைஜரின் தலைநகர் நியாமியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு நியாமியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பல்வேறு நாட்டவர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர், அங்கு உணவு சாப்பிட்டிக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவர் இருவரை வெளியே இழுத்து வந்து காரில் கடத்திச் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டவர் இருவரும் கடத்தல்காரர்களிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரையும் கடத்தல்காரர்கள் கீழே தள்ளிவிட்டு சட்டையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் சென்று கடத்திச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்கள் இருவருமே தலைப்பாகை அணிந்திருந்தனர். உயரமாகவும், சிவப்பாகவும் இருந்தனர். அரபிக் மொழி பேசினர். பிரான்ஸ் நாட்டவரை கடத்த முயன்ற போது எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் என்னை கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் மிரட்டிவிட்டு கடத்திச் சென்றனர். எனினும் அவர்களை நான் காரில் பின்தொடர்ந்து சென்றேன்.
ஆனால் அவர்கள் அதிகமான வேகத்தில் காரை ஓட்டிச் சென்று தப்பித்துவிட்டனர் என்று அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் கூறினார்.
பிரான்ஸ் நாட்டவர்கள் இருவரையும் கடத்தியது யார், அவர்களை ஏன் கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. நியாமி நகர் முழுவதும் கடத்தல்காரர்களை போலீஸôர் தேடிவருகின்றனர். நியாமி நகரைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பித்துச் சென்றிடாத வகையில் நகரைச் சுற்றி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டவர்கள் கடத்தப்பட்டது குறித்து அந்நாட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கடத்தப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக நைஜர் அரசிடம் பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நைஜர் தலைநகர் நியாமியில் பிரான்ஸ் நாட்டவர் 5 பேர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கடத்தப்பட்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் கடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இருப்பினும் அவர்களை அல்-காய்தா பயங்கரவாதிகள்தான் கடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக பிரான்ஸ் சந்தேகிக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்க நைஜருடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நைஜரில் தங்களது நாட்டைச் சேர்ந்த மேலும் இருவர் கடத்தப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.