பிப்ரவரியில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பு
இஸ்லாமாபாத்,ஜன.8: பூடான் தலைநகர் திம்புவில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின் போது இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்குக்
உலகம்பிப்ரவரியில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பு
இஸ்லாமாபாத்,ஜன.8: பூடான் தலைநகர் திம்புவில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின் போது இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்குக்
இஸ்லாமாபாத்,ஜன.8: பூடான் தலைநகர் திம்புவில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின் போது இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்குக்கு ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பசீரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ஆக்கபூர்வமாக எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்களும் வரும் பிப்ரவரியில்தான் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பை இரு நாடுகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.
இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இருவரும் விவாதித்து தீர்வு காண்பார்கள் என்று இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷிக்கு இந்தியா வர அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை முதலில் ஏற்ற குரேஷி, பின்னர் இந்தியாவுக்கு வரும் திட்டமில்லை என்று அறிவித்தார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்தியா உறுதி அளித்தால் மட்டுமே அந்நாட்டுக்கு செல்வது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் திம்புவில் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பின்போது குரேஷிக்கு இந்தியா அழைப்புவிடுத்துள்ளது குறித்தும் ஆலோசிப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சை தொடங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்தாலும், ஆசிய பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு தனது நிலைப்பாட்டை பெருந்தன்மையோடு மாற்றிக்கொண்டது.
அமைதிப்பேச்சை தொடங்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றது. இதையடுத்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், செயலர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூலையில் இஸ்லாமாபாதில் எஸ்.எம்.கிருஷ்ணாவும், குரேஷியும் சந்தித்துப் பேசினர். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா ஒவ்வொரு விஷயத்தையும் தில்லிக்கு தொலைபேசி செய்து கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக குரேஷி புகார் தெரிவித்தார். இதனால் எஸ்.எம்.கிருஷ்ணா அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து அந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. குரேஷியின் செயல்பாட்டால் இரு நாடுகளிடையேயான அமைதிப்பேச்சு மீண்டும் தடைபட்டது.
இருப்பினும் காஷ்மீர் விவகாரம், நதிநீர்ப் பங்கீடு, சியாச்சின் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுதல் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் கூறிவருகிறது.
இந்தியாவோ, மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டித்தல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை தகர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துப் பேச விரும்புகிறது.