முகப்பு
உலகம்

அலாஸ்காவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அலாஸ்கா, கனடா கடற்கரையோரப் பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அமெரிக்காவின் அலாஸ்காவில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அலாஸ்கா, கனடா கடற்கரையோரப் பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

வீடுகளைவீட்டு வெளியேறி வீதிகளில் திரண்டனர்.

அலாஸ்காவின் கிரெய்க் நகருக்கு மேற்கே 102 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் ஏதும் இல்லை.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இருப்பதாக முதலில் எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

கனடாவின் குயின் கார்லோட் தீவில் கடந்த அக்டோபரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஹவாய் பகுதியில் சிறிய அளவிலான சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →