முகப்பு
உலகம்

டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் மெர்கல் தேர்வு

டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 9 டிசம்பர், 2015 at 7:23 PM
பகிர்:

டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழம் ஆண்டுதோறும் செய்திகளில் அதிகமாக இடம்பிடித்தவர்களில் ஒருவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து வருகிறது.

இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது.

Advertisement

ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தற்போதைய அகதிகள் பிரச்னை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான போட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பாகிஸ்தானின் மலலா ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் தவிர  இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் ஒபமா, ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர், ஹிலாரி கிளின்டன், நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா உள்ளிட்ட 58 பேர் போட்டியில் இருந்தனர். இவர்களிலிருந்து எட்டு பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், டைம் இதழின் ஆசிரியர் குழு ஏஞ்சலா மெர்கலை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்து இன்று அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.