சீன நிலச்சரிவு: 60 மணி நேரத்துக்குப் பிறகு ஒருவர் உயிரோடு மீட்கப்பட்ட அதிசயம்
சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களைத் தேடும் பணியின் போது நிலச்சரிவில் சிக்கி 60 மணி நேரத்துக்குப் பிறகு ஒரு நபர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களைத் தேடும் பணியின் போது நிலச்சரிவில் சிக்கி 60 மணி நேரத்துக்குப் பிறகு ஒரு நபர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவின் ஷென்ஸென் நகரத்தில் இருந்த தொழில்நகரப் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. அந்த கட்டங்களில் இருந்த சுமார் 76 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
நிலச்சரிவு நடந்த இடத்தில் மீட்புப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வந்தது.
Advertisement
இந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் தியான் ஸெமிங் (19) என்ற இளைஞர் படுகாயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
மீட்புக் குழுவினரைப் பார்த்ததும் புன்னகைத்த தியான், தனது பெயரை அவர்களுக்கு சொன்னதாகவும், தனக்கு அருகில் மற்றொருவரும் உயிரோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு அருகில் இருந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.