உலகம்

அமெரிக்காவில் புயல், மழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு

அமெரிக்காவின் தென் பகுதியில் கடும் புயல், மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்தது.

ANI

அமெரிக்காவின் தென் பகுதியில் கடும் புயல், மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்தது.

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக வீசிய கடும் புயல், டெக்ஸாஸ், மிஸிஸிப்பி, டென்னிஸி, ஆர்க்கன்ஸா ஆகிய மாகாணங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் நகரையொட்டிய ஃபோர்ட் ஒர்த் பகுதியில் வீசிய சுழற்காற்றுக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பலத்த சுழற்காற்றில் இவர்கள் தூக்கியெறியப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். டெக்ஸாஸின் கார்லண்ட் நகரப் பகுதியில் வீசிய புயலில் 8 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.கார்லண்ட் பகுதியில் அடுத்தடுத்து வீசிய பெரும் சுழற்காற்றுகள் ஏராளமான மரங்களை வேரோடு சாய்த்தன. இதில் பல வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. பல வீடுகள் தரைமட்டமாக்கின.

நகரத்தில் பல இடங்களில் மின்சாரக் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இல்லினாய்ஸ், மிஸ்சொரி ஆகிய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் பெய்த மழை, புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆகவும், மிஸிஸிபி, டென்னிஸி, ஆர்க்கன்ஸா ஆகிய மாகாணங்களில் புயல் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆகவும்உயர்ந்துள்ளது.

வானிலை மிக மோசமாக உள்ள நிலையில் 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT