நீண்ட ஆரோக்கியத்துக்கு வயிறு சொல்வதைக் கேட்டால் போதும்
நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், நேரம் என்பதை இங்கே 10 மணி என்றோ, 1 மணி என்றோ கருதாமல், பசித்த நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், நேரம் என்பதை இங்கே 10 மணி என்றோ, 1 மணி என்றோ கருதாமல், பசித்த நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆம், மதிய உணவு வேளை வந்து விட்டது என்பதற்காகவோ, உங்களுக்கு பிடித்தமான உணவு என்பதாலோ ஒரு உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அது உங்கள் உடல் நலனை பாதிக்கும்.
பலரும், ருசியான உணவுப் பொருட்கள் கிடைத்ததும் சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால், அப்போது அவர்களுக்கு பசி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலைப்படுவதில்லை.
Advertisement
ஆனால், நீண்ட ஆரோக்கியமான உடலைப் பெற வேண்டும் என்றால், உணவு கிடைத்த போதெல்லாம் உண்ணாமல், உங்களுக்கு பசி வந்த பிறகே உண்ண வேண்டும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் டேவிட் கல் குழுவின் ஆராய்ச்சியில் உறுதி சய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பசியோடு இருப்பவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்களது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு குறைந்த அளவிலேயே உயர்வதாகவும், பசி இல்லாத நேரத்தில் உணவு சாப்பிட்டவர்களின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மிக அதிகமாக உயர்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.