உலகம்

எலுமிச்சம் பழம் கலரு, அழகான கூந்தலுடன் பெண் உருவ 'ரோபோ'

சிங்கப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நிஜ பெண்ணைப் போன்ற உருவில் ஒரு ரோபோவை செய்து சாதனை படைத்துள்ளனர்.

PTI

சிங்கப்பூரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட நிஜமான பெண்ணைப் போன்ற  உருவத்தில் ஒரு ரோபோவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தோழமையாக இருக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை தயாரித்துள்ளனர். 'நடைன்' என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ மனிதத் தோல் அமைப்புடன், பெண்களுக்கே உரிய அழகான கூந்தல் அலங்காரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற ரோபோக்கள் போல் அல்லாமல், 'நடைன்' தனக்கே உரிய மனநிலை, உணர்ச்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களுடன் உரையாடும்போது அது தனது மனநிலையை வெளிப்படுத்தும்.  மேலும், நல்ல ஞாபக சக்தியுடனும் அது உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை நீங்கள் அதை சந்திக்கும்போது, நீங்கள் யார், கடந்த முறை சந்தித்தபோது என்ன பேசினீர்கள் என்பது உள்ளிட்ட விவரங்களைக் கொட்டும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ரீ அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கோர்ட்னா ஆகியவற்றுக்கு இணையான அறிவார்ந்த மென்பொருள் மூலம் 'நடைன்' இயக்கப்படுகிறது.

'நடைன்' ரோபோவை அலுவலங்களில் உதவியாளர்களாகவும், வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உற்ற தோழனாகவும் பயன்படுத்தும் நிலை எதிர்காலத்தில் உருவாகும்.

'நடைன்' தவிர 'எட்கர்' என்ற தூரத்திலிருந்து இயக்கும் ரோபோவையும் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT