உலகம்

பராக்-8: இந்தியா-இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கியுள்ள பராக்-8 ஏவுகணை வெற்றிகரமாக நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.

PTI

இந்தியாவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கியுள்ள பராக்-8 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இஸ்ரேல் கடற்படைக்கு சொந்தமான கப்பலிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, வானில் பறக்கவிடப்பட்ட விமானத்தை குறிதவறாமல் தாக்கியதாக கூறிய இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள, இது 100 சத வெற்றி என்றனர்.

வானில் பறந்துவரும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளிலில்லா விமானங்களை தரையிலிருந்து தாக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையமும், இஸ்ரேல் வானியல் துறையும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏவுகணையின் அடுத்த சோதனை வரும் டிசம்பர் மாதம், இந்தியாவின் ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பலில் நடைபெறும் எனத் தெரிகிறது.

இன்னும் இரு ஆண்டுகளில் இந்த ஏவுகணை இஸ்ரேல் பாதுகாப்பு படையில் சேர்க்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

இஸ்ரேலின் எரிவாயு கிடங்குகளின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும். மேலும், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வசம் உள்ள  யாக்யன்ட் ஏவுகணைகளை தகர்க்கவும் பாராக்-8 உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT