உலகம்

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் இறக்கிவிடப்பட்ட இந்திய-அமெரிக்கர்

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டார்.

PTI

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டார்.

கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று, பாகிஸ்தான் வான்வெளியில் செல்லும் போது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்திய அமெரிக்கர் அஜிஸ் விஜய் ஜோஷி கூறினார். இதையடுத்து விமானம் அவசரமாக இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் நடத்திய சோதனையில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கத்தார் விமான ஊழியர்கள் ஜோஷியை, இஸ்லாமாபாத்திலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

ஜோஷி சிறிது நேர காவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் தோஹா சென்றாரா அல்லது அமெரிக்கா சென்றாரா என்ற விவரம் தெரியவில்லை.

தீவிரவாதிகளால் ரஷ்ய விமானம் தகர்க்கப்பட்ட பிறகு உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்கள் அதிக முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT