க்விடோ : ஈக்வடார் நாட்டில் கடந்த 16ம் தேதி நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கியவர்களில் 113 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
ஈக்வடாரில் நிகழ்ந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 587 பேர் உயிரிழந்தனர். 8,430 பேர் காயமடைந்தனர். 153 பேரைக் காணவில்லை என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.
நிலநடுக்கத்தினால் வீடுகளை இழந்த சுமார் 25,376 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.