உலகம்

பிடல் காஸ்ட்ரோவுக்கு நினைவுச்சின்னங்கள் அமைக்க வேண்டாம்: கியூப அதிபர் வேண்டுகோள்!

DIN

ஹவானா: சமீபத்தில் மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு நினைவுச்சின்னங்கள் எதுவும் அமைக்க வேண்டாம் என்று கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கியூப நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. தொடர் உடல்நல குறைவு காரணமாக 2008–ல் ஆட்சியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார். உடல் நிலை கடுமையாக மோசமடைந்ததைத் தொடர்ந்து  பிடல் காஸ்ட்ரோ  கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அனுதாபம் தெரிவித்தனர்.

மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் விருப்படி அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது உடலானது சான்டியாகோ நகரில் உள்ள சான்ட்டா எபிஜெனியா கல்லறையில் இன்று அடக்கம் செய்யபப்ட்ட உள்ளது.

இந்த நிலையில் பிடல் கேஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்த பொது மக்களிடையே இன்று பேசிய கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, 'மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் பெயரை அரசு நிறுவன கட்டிடங்கள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சூட்டக் கூடாது என்றும், மார்பளவு சிலை, முழு அளவு சிலை மற்றும் மணி மண்டபங்கள் அமைக்கப்படுவதை தனது வாழ்நாளின் போது பிடல் காஸ்ட்ரோ விரும்பியதில்லை, எனவே அவற்றையும் அமைக்க கூடாது என்றுகுறிப்பிட்டர். 

விரைவில் நடக்க உள்ள கியூபாவின் பாராளுமன்ற கூட்டத்தின் போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாக  புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் ரவுல் கேஸ்ட்ரோ அறிவிப்பு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT