மாஸ்கோர்: ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து 91 பேருடன் புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் மாயமானது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம், புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற தகவலை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்து உள்ளது.
விமானத்தில் 83 பயணிகள் மற்றும் 8 பேர் விமான பணியாளர்கள் உள்பட 91 இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் அவசர சேவை பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சோவியத் வடிவமைக்கப்பட்ட மூன்று இயந்திரம் கொண்டது டியு-154 விமானம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.