உலகம்

நைஜீரியா: பெண்கள் தற்கொலைப் படை தாக்குதலில் 58 பேர் பலி

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலியாகினர்.

PTI

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைதுள்ளது போர்னோ மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரான மாய்துகுரியிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது திக்வா நகரம். போகோ ஹராம்  முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தபோது, அங்கு நுழைந்த இரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீரென்று தாங்கள் கட்டி வந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தனர்.

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் வரை கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாவர்.

 அந்த முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றுள்ளதையடுத்து தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த 78 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நைஜீரிய நாட்டின் துணை அதிபர் யேமி ஓசின்பேஜோ கூறுகையில், தாக்குதல் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

 அந்த முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றுள்ளதையடுத்து தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த 78 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT